‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தேர்தல் ஆணையம் தனிச்சின்னமாக 'கேமரா' சின்னத்தை வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முதற்கட்டமாக 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதி, விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி உள்பட பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் கட்சியின் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை 2 தொகுதி மற்றும் வன்னியர் 10.5 இடஒதுக்கீடு உள்பட 10 கோரிக்கையை முன்வைத்தார்.

அதனை திமுக ஏற்கவில்லை. இதையடுத்து வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் சட்டசபை தேர்தலில் தனித்து தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். அதோடு வரும் சட்டசபை தேர்தலில் பண்ருட்டி உள்பட எந்த தொகுதியிலும் தான் போட்டியிடவில்லை என்று வேல்முருகன் அறிவித்தார்.
இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தனிச்சின்னம் கோரப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் 'கேமரா' சின்னத்தை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு வழங்கி உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக இன்று வேல்முருகன் அறிவித்தார். அதுமட்டுமின்றி தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் இன்று வெளியிட்டார்.
அதன்படி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் போட்டிடுகிறார். அதுமட்டுமின்றி முதல்வர் முக ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதி, விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி உள்பட 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வேல்முருகன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
கொளத்தூர் - ஊர்மிளா
பெரம்பூர் - வேணுகோபால்
மாதவரம் - கார்த்திகேயன்
மதுரவாயல் - தர்மேஷ்
ஆவடி - எட்மண்ட்
திருத்தணி - பாவேந்தன்
அம்பத்தூர் - ராஜ்குமார்
ஆர்கே நகர் - நவீன்
வில்லிவாக்கம் - அப்துல் சபீர்
திருவொற்றியூர் - வெங்கடரமணன்
விருகம்பாக்கம் - முத்துராஜ்
ஸ்ரீபெரும்புதூர் - ஞானசேகரன்
ஆலந்தூர் - ராயப்பன்
தாம்பரம் - பொன்ராஜ்
செங்கல்பட்டு - செல்லா
திருப்போரூர் - சுரேஷ்
செய்யூர் - கங்காதுரை
மதுராந்தகம் (தனி) - புண்ணியகோடி
காஞ்சிபுரம் - நரேஷ்
சோளிங்கர் - சுதாகர்
வாணியம்பாடி - தேவேந்திரன்
ஜோலார்பேட்டை - சங்கர்
திருப்பத்தூர் - ராஜேஷ்
பர்கூர் - ஆல்பர்ட் சேவியர் பிரான்சிஸ்
கிருஷ்ணகிரி - முத்துலட்சுமி வீரப்பன்
வேப்பனஹள்ளி - குமார்
ஒசூர் - ரமேஷ் பாபு
தளி - கரிகாலன் அஜித்
பாலக்கோடு - ஜெயராமன்
பென்னாகரம் - தவமணி
தர்மபுரி - பிரசாந்த்
அருூர் தனி - மணிலா
ிருவண்ணணாமலை - மல்லி
கிழ் பெண்ணாத்தூர் - ராஜசேகர்
கலசப்பாக்கம் - சரவணன்
ஆரணி - கார்த்திகேயன்
செய்யாறு - பழனி
செஞ்சி - ராஜநாயகம்
மயிலம் - ஆனந்த் பாபு
வானூர் (தனி) - சக்திவேல்
விழுப்புரம் - குமரன்
விக்கிரவாண்டி - சேட்
திருக்காவிலூர் - தமிழ் செல்வன்
உளு்ந்தூர்பேட்டை - ராஜேஷ்
ரிஷிவந்தியம் - சங்கதமிழன்
சங்கராபுரம் - ராமச்சந்திரன்
கள்ளக்குறிச்சி தனி - முருகன்
கெங்கவல்லி தனி -
காட்டுமன்னார்குடி - ஆளவந்தான்
மயிலாடுதுறை - சரவணன்
திருவாரூர் - கந்தன்
பாபநாசம் - தாமோதரன்
திருவையாறு - விஜயா பாபு
பட்டுக்கோட்டை - சுரேஷ்
சிவகங்கை - ராஜேஷ்
மானாமதுரை - அருண் பாண்டியன்
ஆண்டிபட்டி - முகமது ருக்மான்
பெரியகுளம் - ரகுநாதன்
போடி நாயக்கன்னூர் - ஆசிப் மவுலான
கம்பம் - முத்து பகவதி என மொத்தம் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications