தமிழகத்தில் பிறமொழி படங்களை திரையிட முடியாத சூழல் ஏற்படும்! விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய வேல்முருகன்!
சென்னை: தமிழ்நாட்டில் பிற மொழி படங்களை தடுத்து நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்புச் சகோதரர் நடிகர் விஜயின் திரைப்பட வெளியீட்டுக்கு மட்டும் எழுந்திருக்கும் பிரச்சனை அல்ல இதுவென்றும் தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடு இது என்றும் சாடியிருக்கிறார்.
நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வேல்முருகன் இது தொடர்பாக விடுத்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது;

வாரிசு படம்
தமிழ் நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அன்புச் சகோதரர் விஜய்
தெலுங்குத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்பு சகோதரர் விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது அன்புச் சகோதரர் நடிகர் விஜயின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் பிரச்சனை அல்ல. அடுத்தடுத்து வரும் தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டு எதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடு.

கலைக்கு மொழி இல்லை
நேரடித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழி திரைப்படங்களோ எதுவாகினும் தமிழ்நாட்டில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் விதிக்கப்படவில்லை. கலைக்கு மொழி, இனம் இல்லை என்று கூறுகின்றனர். அதனை நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

தவாக எச்சரிக்கை
எனவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் வெளியிட முடியாதென தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications