பண்ருட்டியில் வேல்முருகனுக்கு வெற்றி.. டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி அபாரம்.. தந்தி டிவி சர்வே
சென்னை: டெல்டா மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் வெல்லும் என்றும், திமுக கூட்டணி சார்பில் பண்ருட்டியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும், தந்தி டிவி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தந்தி டிவி கருத்துக் கணிப்பில் டெல்டா தொடர்பானதை இதோ பாருங்கள்:
திருவையாறு சட்டசபை தொகுதியில், திமுக 47 சதவீதம் முதல் 53 சதவீத வாக்குகளைப் பெறும். பாஜக 38 சதவீதம் முதல் 44 சதவீதம் வரை வாக்குகளை பெறக்கூடும்.

கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம்
பாபநாசம் சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 41 சதவீதம் முதல் 47 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்று வெல்லக்கூடும். அதிமுக கூட்டணி 42 சதவீதம் வரை வாக்கு பெறும். கும்பகோணம் சட்டசபை தொகுதிகளில் திமுக 44 சதவீதம் முதல் 50% வரை வாக்குகளை பெறும். அதிமுக கூட்டணி 38 சதவீதம் முதல் 44 சதவீதம் வரை வாக்குகளை பெறும். மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் 44 சதவீதம் முதல் 50% வரை வாக்குகளைப் பெறும். பாட்டாளி மக்கள் கட்சி 37 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது.

சீர்காழி, வேதாரண்யம்
சீர்காழி சட்டசபை தொகுதிகளில் திமுக 44 சதவீதம் முதல் 50% வரை வாக்குகளை பெறும். அதிமுக 40 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை வாக்குகளை பெறும். வேதாரண்யம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குறிஞ்சிப்பாடி, நெய்வேலி
குறிஞ்சிப்பாடி தொகுதி - திமுக கூட்டணி 45-51 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 3-6%, நாம் தமிழர் 4-7%, நெய்வேலி தொகுதி - திமுக கூட்டணி 46-52 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%, திருவாரூர் தொகுதி - திமுக கூட்டணி 44-50 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6% இவ்வாறு கூறுகிறது தந்தி டிவி கணிப்பு.

திருவாரூர்
திருவாரூர் தொடர்ந்து திமுக கோட்டையாக இருக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் அமையப்போகிறது. மன்னார்குடி தொகுதி - திமுக கூட்டணி 40-46 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 8-11%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%, நன்னிலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48 %, திமுக கூட்டணி 41-47%, அமமுக 58%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி
பரமக்குடி தொகுதி - அதிமுக கூட்டணி 45-51 %, திமுக கூட்டணி 40-46%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%, பண்ட்ருட்டி தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5% இப்படிச் சொல்கிறது கருத்துக் கணிப்பு.

வேல்முருகன் வெற்றி
பண்ட்ருட்டியில் த.வா.க தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கருத்துக் கணிப்பில் அந்த தொகுதியில் திமுக கூட்டணிதான் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேல்முருகன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications