"இதை" மட்டும் முதல்வர் ஸ்டாலின் காதுக்கு கொண்டு போங்க.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்.. என்னாச்சு
சென்னை: "பெரியாரைப் போலவே சமூக நீதிக்காக பாடுபட்ட அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வரலாற்றில், பெண்கள் தாங்கள் மேலாடை அணிய வேண்டி ஒரு போராட்டம் நடத்தினார்கள் என்பதே வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் தோன்றிய நாளிலிருந்து, இன்றுவரை பெண்கள் அவற்றுக்கு எதிராகவும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது..

வடிவங்கள்
போராட்ட வடிவங்களும் முறைகளும்தான் மாறுகிறதே தவிர, போராட்டங்கள் இன்னமும் இங்கு குறையவில்லை.. தடைகளும் நீங்கவில்லை.. அந்தவகையில், இந்தியாவில் அதுவும், தமிழ்நாட்டில் பெண்கள் உரிமைக்கான ஒரு போராட்டம் நடந்திருக்கிறது.. அதுவும் ஆடை அணிவதற்காக, அந்த போராட்டம் நடந்துள்ளது.. தமிழ்நாட்டு வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமாகக் கருதப்படும் 'தோள் சீலைப் போராட்டம்தான் அது.. உணவு, உடை ஆகியவை சாதியத்தோடும் பாலினத்தோடும் தொடர்புப்படுத்தி பார்க்கப்படுவது இன்றுவரை தொடர்கிறது என்றாலும், அன்றைய தினம் இந்த தோள்சீலை போராட்டம், எழுச்சிமிகு போராட்டமாக நம் தமிழகத்தில் அன்று திகழ்ந்திருக்கிறது.

வேல்முருகன்
இந்நிலையில், "பெரியாரைப் போலவே சமூக நீதிக்காக பாடுபட்ட அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.. நேற்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசியபோது, "கேரளா அரசோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இவை அனைத்தையும் நான் வரவேற்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றி
தந்தை பெரியாருடைய லட்சியத்தையும் சமத்துவத்தையும் பெண் விடுதலைக்கான குரலையும் எங்கெல்லாம் சாதிய தீண்டாமைகள் சாதிய இழிவுகள் இருந்ததோ அதை அத்தனையும் துடைப்பதற்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரை போற்றுகிற, வணங்குகிற தமிழ் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்ற இந்த மகத்தான பகுதியை விதி 110க்கும், அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மார்புகளை மறைத்து
இதே சமகாலத்தில் 1924, 1925-ல் தோள் சீலை போராட்டம் என்கிற போராட்டத்தை அறிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த ஐயா வைகுண்டர் மிகப்பெரிய புரட்சியை அந்த மண்ணில் படைத்தார்கள். நம்முடைய பெண்கள் மார்பை மறைத்துக் கொள்வதற்கு அனுமதி இல்லை என்றும் மார்புகளை மறைத்து தோள் சீலை அணிவதற்கு உரிமை இல்லை என்றும் அங்கு ஒரு சாதிய ஆதிக்க கொடுமைகள் இருந்தது. மார்பை மறைப்பவர்களுக்கு தண்டனை விதிப்பது, அபராதம் விதிக்கிற கொடுமை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்து நம்முடைய வீர தமிழச்சிகள் மார்பை அறுத்தெறிந்து போராடி இருக்கிறார்கள்.

தோல் சீலை
இது தமிழ்நாட்டின் வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்டிருக்கிறது. ஏதோ இது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கான போராட்டம் என்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. அதனால் நான் தமிழக முதலமைச்சரிடம், "ஐயா வைகுண்டரும், தந்தை பெரியாரைப் போல் சமூக நீதிக்காக போராடியிருக்கிறார். சாதிய தீண்டாமைக்கு எதிராக போராடி இருக்கிறார், தோள் சீலை போராட்டத்திற்கு எதிராக போராடியிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்துவதற்கு எதிராக போராடி இருக்கிறார். ஆதலால் தந்தை பெரியாரைப் போற்றுகிற வணங்குகிற நாம் அய்யா வைகுண்டரையும் போற்ற வேண்டும்.

சான்ஸ் ததல
வரலாற்றில் இளைய தலைமுறைக்கு மாணவர் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன்வைத்து இருக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு ஐயா வைகுண்டர் குறித்தும் எதிர்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்ற நல்வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச முயற்சித்தபோது பேரவை தலைவர் விரிவாக பேச வாய்ப்புத் தராததால் முதலமைச்சர் காதுக்கு கண்டிப்பாக முழுவதுமாக போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்.. பாடத்திட்டங்கள் மூலம் வைகுண்டர் பெருமை தமிழ் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும்.. வரலாற்றில் போற்றுக்குரியவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் வேல்முருகன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications