அதிமுகவில் இணையும் வெண்மதி.. சசிகலா பேச பேச ரியாக்சன் கொடுப்பாங்களே! அவங்களே தான்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா அணியில் இணைந்தவர்களை மீண்டும் அதிமுகவுக்கே கொண்டு வந்து உரிய மரியாதையும், பதவியும் கொடுக்க வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் முதல் விக்கெட்டாக சசிகலாவின் பல ஆண்டு தீவிர ஆதரவாளரான வெண்மதி அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

Sasikala Edappadi Palaniswami

அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது.

ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சொன்னது உண்மை தான் என்பதைப் போல நேற்று நடந்த அதிமுக அவசர செயற்குழு கூட்டம், முழுக்க முழுக்க எவ்வித பிரச்சினைகளும் சலசலப்புகளும் இன்றி தான் நடந்ததாகக் கூறுகின்றனர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியதாகவும், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அணியில் இருக்கும் நிர்வாகிகளை கட்சியில் சேர்த்து அவர்கள் உரிய பதவி, மரியாதை அளிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா அணி நிர்வாகிகளுடன் பேச தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தென் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இணைய சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இணையும் முக்கிய முதல் விக்கெட்டாக சசிகலாவின் பல ஆண்டு தீவிர ஆதரவாளரான வெண்மதி அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வெண்மதி எப்போதும் அவர் நிழல் போல கூடவே பயணிப்பவர். கடந்த காலங்களில் சசிகலா சுற்றுப் பயணம் செய்தபோது, அவரது செய்தியாளர் சந்திப்புகளின் போதும் கூடவே இருப்பவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சசிகலா பேட்டி அளித்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த வெண்மதி கொடுத்த முக பாவனைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

Sasikala Edappadi Palaniswami

இதனை வைத்தே ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் நெட்டிசன்கள் மூலம் பறக்க விடப்பட்ட நிலையில் அவர் யார் என தேடத் தொடங்கும் அளவுக்கு பேமஸ் ஆனார். இந்த நிலையில் அப்போது சசிகலாவின் பேட்டியை விட அவரது முகபாவனைகள் தான் பேசப்பட்டது. அதை அடுத்து சசிகலாவுக்கு நெருங்கிய உறவினரான ஒருவர் வெண்மதியை தொடர்பு கொண்டு "நீ கொடுத்த ரியாக்ஷனால் சசிகலா கொடுத்த பேட்டியை காமெடி நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது.. இனிமேல் அவர் அருகில் நீ நிற்கக்கூடாது" என ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சசிகலாவை தொடர்பு கொண்டு பேசிய வெண்மதி,"நான் உங்களுடன் பயணிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை" என புலம்பினாராம். இதை அடுத்து பேசிய நபரை கண்டிக்கச் சொல்லி சசிகலாவே தனது உறவினரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரோ தன்னால் முடியாது என கை விரித்து விட்டாராம். இதனால் சசிகலா தவிர தனக்கு எதிராக அனைவரும் சதி செய்வதாக நினைத்த வெண்மதி சசிகலாவின் தென்காசி நெல்லை மாவட்ட சுற்றுப்பயணங்களில் தலை காட்டவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அவர் அதிமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+