முகம், கை, கால் வீக்கம்.. நடக்க முடியலை.. கருணை கொலை செய்துடுங்க.. வெண்ணிலா கபடி குழு நடிகர் கண்ணீர்
சென்னை: வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் ஹரி வைரவன் சர்க்கரை நோயால் சிறுநீரகங்கள் செயலிழந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளிலும் துணை வேடங்களிலும் நடித்தவர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா காமெடியில் சூரியுடன் வைரவன் நடித்துள்ளார்.
50 பரோட்டாக்களை சாப்பிட்டால் சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசு கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக ஹோட்டல் நிர்வாகமே காசு கொடுக்கும் என்பதுதான் வெண்ணிலா கபடி குழுவில் வரும் ஒரு சீனாகும்.

பரோட்டா கடை
இந்த போட்டியை அறிந்து கொண்டு பரோட்டா கடையில் நடிகர் சூரி பந்தயத்துக்கு நாங்க வரலாமா என கேட்பார். அதற்கு அந்த கடைக்காரர் "இவனைத் தவிர" யார் வேண்டுமானாலும் வரலாம் என்பார். அந்த சீனில் "இவனை தவிர" என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஹரி வைரவன்.

உடல் நிலை பாதிப்பு
இவருக்கு அண்மைக்காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், இதய நோய், இரு கிட்னிகளும் செயலிழப்பு என ஆபத்தான வியாதிகளுடன் ஆளே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறார். கால்கள் இரண்டும் வீங்கி போய் அவரால் நடக்க கூட முடியாத நிலை உள்ளது.

உடல் பருமன்
உடலும் பருமனாகிவிட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தனியார் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில் என் மனைவி கவிதா இல்லாமல் என்னால் இந்த கைலியை கூட கட்டிக் கொள்ள முடியாது. எனக்கு 11 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. உடல் முழுவதும் முக்கிய பகுதிகளில் வியாதி ஏற்பட்டுள்ளதால் அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு சென்று மருந்து மாத்திரை வாங்கி வருவேன்.

நகை, வீட்டை விற்று சிகிச்சை
என் மனைவி போட்டு வந்த நகைகளையும் விற்று சிகிச்சை செய்துவிட்டோம். மேலும் என்னை கருணை கொலை செய்துவிடு என்று கூட என் மனைவியிடம் கேட்டுள்ளேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்கையில் என்னை கவனித்து கொள்ள என் மனைவி படும் அவஸ்தையை என்னால் காண முடியவில்லை.

6 மாதங்கள்தான் கெடு
தற்போது உடல்நிலை மோசமாகிவிட்டதால் 6 மாதங்கள்தான் என என் உயிருக்கு கெடு விதித்து விட்டார்கள். ஆனால் என் மனைவி நம்பிக்கையாக இருக்கிறார். தற்போது சிகிச்சை பெற பணம் இல்லாமல் உள்ளேன். என் மனைவி, குழந்தையை எனக்கு பிறகு யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார். இதுகுறித்து மனைவி கூறுகையில், அவர் இருக்கும் வரை அவரது இயற்கை உபாதைகளை கூட நான் எடுத்து போட்டு விடுகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அவருக்கு பணத்தை புரட்டி சிகிச்சை அளித்துவிட்டேன். யாராவது எனது கணவருக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். ஒரு ஆறு மாதம் சிகிச்சைக்கு உதவினால் அவர் குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். இதுவரை என் கணவருடன் நடித்த பிளாக் பாண்டி, சரவணன், கார்த்திக் உள்ளிட்டோர் உதவி செய்துள்ளனர் என்றார். இவர்களுக்கு சின்னஞ்சிறிய பெண் குழந்தையும் உள்ளது. காமெடி நடிகர் போண்டா மணிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதனால் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications