லாபப் பாதையில் Verse இன்னோவேஷன்: ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய பாய்ச்சல்; விரைவில் ஐபிஓ!
● செலவினங்களைக் குறைத்து, திட்டமிட்ட வளர்ச்சியின் மூலம் 'பிரேக்-ஈவன்' நிலையை எட்டியது வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனம்.
● வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனத்தில் செய்திகள் முதல் விளம்பரங்கள் வரை அனைத்திலும் 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பமே இனி பிரதானம்.
● தொடர் லாபம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளைத் தொடர்ந்து, விரைவில் பொதுப் பங்கு வெளியீட்டில் (IPO) தடம் பதிக்கத் திட்டம்.
டெய்லிஹண்ட், ஜோஷ், மேக்ஸ்டர் மற்றும் NexVerse.ai ஆகிய முன்னணி தளங்களின் தாய் நிறுவனமான 'வெர்ஸே இன்னோவேஷன்', தற்போது லாபம், முறையான வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தூண்களாகக் கொண்டு தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. செலவினங்களைக் குறைத்து, திட்டமிட்ட வளர்ச்சியின் மூலம் 'பிரேக்-ஈவன்' நிலையை எட்டியது வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனம். தொடர் லாபம் மற்றும் சிறப்பான செயல்பாடுகளைத் தொடர்ந்து, பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) வெர்ஸே இன்னோவேஷன் தயாராகி வருகிறது.
'வெர்ஸே இன்னோவேஷன்' (VerSe Innovation), இப்போது ஒரு புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. "வெறும் வளர்ச்சி மட்டும் போதாது, லாபமும் முக்கியம்" என்கிற இலக்கோடு, ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி களம் இறங்கியிருப்பதாக, டாக்டர் அனுராக் பத்ரா உடனான உரையாடலில் அதன் இணை நிறுவனர் உமங் பேடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் இந்த நிறுவனம், கடந்த ஒரு வருடமாகத் தனது செலவுகளைக் கிடுகிடுவெனக் குறைத்துள்ளது. இப்போது மாத அடிப்படையில் லாப நஷ்டமற்ற (Break-even) நிலையை எட்டிவிட்டது. ஆரம்பத்தில் டிஜிட்டல் உலகம் அசுர வளர்ச்சி கண்டபோது, போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்த காலம் போய், இப்போது நிதானமான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நிறுவனம் திரும்பியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய ஸ்டார்ட்-அப் உலகிற்கே ஒரு முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது.
வெர்ஸே நிறுவனத்தின் ஒவ்வொரு அசைவிலும் இனி ஏஐ (AI) இருக்கும். செய்திகளைத் தொகுப்பது, தவறான பதிவுகளை நீக்குவது, பயனாளர்களின் ரசனைக்கு ஏற்ப செய்திகளைக் கொடுப்பது என அனைத்தையும் ஏஐ மூலமாகவே தானியங்கி முறையில் மாற்றியுள்ளனர். இது தவிர, விளம்பரதாரர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய விளம்பரத் தளம் மற்றும் ஆக்கப்பூர்வமான ஏஐ கருவிகளையும் உருவாக்கி வருகின்றனர். இத்தகைய மாற்றங்கள் நிறுவனத்தின் செலவைக் குறைப்பதோடு, வருமானத்தைப் பெருக்கவும் உதவும் என நம்புகிறார்கள்.
இந்தியாவின் டிஜிட்டல் சந்தை பற்றிப் பேசிய உமங் பேடி ஒரு கசப்பான உண்மையைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தினாலும், விளம்பர வருமானம் என்னவோ ஒரு சிறிய கூட்டத்திடம் மட்டுமே இருக்கிறது. அதிலும் பெரும்பகுதியை கூகுள், மெட்டா போன்ற உலகளாவிய நிறுவனங்களே தட்டிச் செல்கின்றன. இதைச் சமாளிக்க, பிரீமியம் சந்தாதாரர்கள் மற்றும் செயல்திறன் மிக்க விளம்பரங்களில் வெர்ஸே கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஏஐ தயாரிப்புகள் மூலம் உலகச் சந்தையையும் குறிவைக்கிறார்கள்.
நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, விரைவில் பங்குச் சந்தையில் (IPO) நுழைவது இவர்களது நீண்டகாலத் திட்டம். லாபம் நிலையான பிறகு, மிகச் சரியான நேரத்தில் பொதுப் பங்கு வெளியீடு இருக்கும் என்கிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் உள்ளடக்கம், தொழில்நுட்பம் மற்றும் விளம்பரம் ஆகிய மூன்றும் கைகோர்த்தால் தான் ஜெயிக்க முடியும். அந்தப் புள்ளியில் ஏஐ தொழில்நுட்பத்தை ஏணியாகப் பயன்படுத்தி வெற்றியை எட்டத் துடிக்கிறது வெர்ஸே.
வெர்ஸே இன்னோவேஷன் பற்றி ஒரு பார்வை:
தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் உலகிற்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதே வெர்ஸே-வின் நோக்கம். டெய்லிஹண்ட் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்குத் தாய்மொழியில் செய்திகளைத் தந்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி கிரியேட்டர்கள் செயலியான 'ஜோஷ்'-ம் இவர்களுடையதுதான். இதுதவிர NexVerse.ai, டெய்லிஹண்ட் பிரீமியம் எனப் பல தளங்கள் மூலம் இந்திய டிஜிட்டல் சந்தையை இவர்கள் மாற்றி அமைத்து வருகிறார்கள். கூகுள், மைக்ரோசாஃப்ட் என உலகளாவிய ஜாம்பவான்கள் இதில் முதலீடு செய்திருப்பதும், உள்ளூர் மொழிகளுக்கான முதல் 'யுனிகார்ன்' ஸ்டார்ட்-அப் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications