Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிகப்பெரிய சான்ஸ்! கல்விக் கடன் பெற நாளை சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க! என்னென்ன சான்றிதழ் தேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கல்விக்கடன் சிறப்பு முகாமில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது. உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றால் போதும்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? கல்விக்கடன் பெற விதிமுறைகள் என்ன.. வாங்க பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஏராளமான வசதியற்ற மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Very big chance to get education loan easily: Dont miss: What are the documents required

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது என்பதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்கள்: தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்

கடன் வரம்பு: ரூ.1 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம். ரூ.1,00,001 முதல் ரூ.5,00,000 வரை அளிக்கப்படும் கடனுக்கு 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வக கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும்.

வட்டி விகிதம்: கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும். இணைப்புச் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிதியுதவி வழங்கும் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம் : கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும்.

மாணவர்கள் கடன் பெற தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். கல்விக் கடன் பெறும் மாணவன் அல்லது மாணவி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி பெறும் படிப்புகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகள், தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் (UG Degrees including Professional courses), முதுகலைப் பட்டப் படிப்புகள்.

மாணவரின் பெற்றோர்(கள்) கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக (Co-applicant) சேர வேண்டும். திருமணமான மாணவர் என்றால் அவரின் கணவர்/ மனைவி/ மாமனார்/ மாமியார் இணை விண்ணப்பதாரராக (Co-applicant) இருக்கலாம். ஒரு படிப்பின் அடுத்த ஆண்டுகளில் மாணவர்கள் கல்விக் கடனுக்கு வங்கி / கூட்டுறவு சங்கத்தை அணுகினால், அம்மாணவர் வேறு எந்த வங்கியிலிருந்தும்/ நிதி நிறுவனத்திலிருந்தும் ஆரம்ப ஆண்டுகளில் (initial years) கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்து தகுதியுடைய மாணவர்களுக்கு கடன் வழங்க பரிசீலிக்கலாம்.

தேவையான சான்றிதழ்கள், ஆவணங்கள்: கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், கல்லூரி கட்டண ரசீது, முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய சான்று, கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளையும் தயாராக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Very big chance to get education loan easily: Dont miss: What are the documents required

உதயநிதி அழைப்பு: இதுதொடர்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எல்லோரும் கல்வி கற்க பள்ளி - கல்லூரிகளை திறந்தார்கள்.

கட்டணமில்லா பஸ் பயணம் - உதவித்தொகை - முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண விலக்கு என்ற கலைஞர் அவர்களின் வழியில், கல்வி வளர்ச்சிக்காக காலை சிற்றுண்டி திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், பட்டப்படிப்புக்காக சேரவுள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் நம் திராவிட மாடல் அரசு தமிழ் நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு 'கல்விக்கடன் முகாம்களை' நாளை நடத்துகிறது. இந்த முகாம்களில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடைய மாணவ - மாணவியர்களை வாழ்த்துகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+