பாக்யராஜ் ஏன் இங்கே வந்தாரு? அவர் யாரு பக்கத்துல? மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி.. ஒன்னுமே புரியலயே
சென்னை: அதிமுகவில் இன்னும் கூட்டணி அமையவில்லை.. பேச்சுவார்த்தைகள் முடியவில்லை.. எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.. ஆனாலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தோஷமாக இருக்கிறார்.. என்ன காரணம்?
கட்சியின் செயல்பாடுகளையும் தாண்டி, எதிர்க்கட்சிகளின் குறைகளை கொண்டு போய் பொதுமக்களிடம் சேர்ப்பதில் பிரதான இடத்தை பெற்று வருகிறது ஐடி விங்க்குகள்.

ஐடி விங்குகள்: தற்போது சோஷியல் மீடியா காலம் என்பதால், இந்த களத்தை ஐ.டி. விங்குகள் தங்களது கட்சிக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக பாஜகவையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
"சோஷியல் மீடியாவிலேயே அரசியல் செய்யுது பாஜக" என்று பல விமர்சனங்கள் அன்று வரத்தான் செய்தன.. ஆனாலும், இன்று பிரதான கட்சிகள் அனைத்துமே, சோஷியல் மீடியாவை கையில் எடுத்துள்ளதுடன், அதில் வெற்றி பெற்று வருவதையும் மறுக்க முடியாது.
அன்று மாநில பாஜகவின் ஐடி விங்க் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த சிடிஆர் நிர்மல் குமார், மிகப்பிரபலமடைந்தது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வந்ததால்தான்.
திமுக விமர்சனம்: முக்கியமாக திமுகவையும் அதிகமாகவே விமர்சனம் செய்து வந்தார். என்னும் சில அதிருப்திகள் காரணமாக அதிமுகவில் இணைந்துவிட்டார்.. இவரை அதிமுக வாரி அணைத்து கொண்டது.. வலுவான அதே பதவியையும் நிர்மலுக்கு வழங்கியது.

இந்த ஒரு வருட காலத்தை எடுத்து கொண்டால், அதிமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது. ஆனால், பாஜகவில் பல நிர்வாகிகளிடம் நல்ல நட்பில் இருப்பால், அவர்களையும், அதிமுக பக்கம் நிர்மல் இழுத்து வந்துவிடுவார் என்றெல்லாம் செய்திகள் கசிந்தன. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதேசமயம், பிற கட்சிகளை சேர்ந்தவர்களை இன்றுகூட அதிமுகவுக்கு இழுத்து வந்துள்ளார்.
மாற்று கட்சியினர்: அமமுகவின் தேனி வடக்கு ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் வெற்றிவேல், செங்கல்பட்டு மாவட்ட அமமுக எம்.ஜி.ஆர் அணி பொருளாளர் மலர்கண்ணன், மதுரை மாநகர் மாவட்ட அமமுக வர்த்தக அணி செயலாளர் ஷேக் முகமது போன்றோர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
அதேபோல, தேமுதிகவின் பாக்கியராஜூம் அதிமுகவில் இணைந்துள்ளார்.. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர்தான் இந்த பாக்கியராஜ். இவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தெம்பு: மாற்று கட்சியினர் இப்படி இணைந்து கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியையும், தெம்பையும் தந்துவருகிறது.. இருந்தாலும் தேமுதிக அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம்.
காரணம், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக முயற்சிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. 4 +1 என்ற பிடிவாதத்தில் தேமுதிக இருப்பதாக தெரிகிறது.. சீட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் தருவதற்கு 2 கட்சிகளுமே தயாராக இருந்தாலும், ராஜ்ய சபா சீட்டை தருவதற்குதான் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
மகிழ்ச்சியில் எடப்பாடி: எனினும், எப்படியாவது பேசி சமாதானம் செய்து, சரிக்கட்டி அதிமுகவுக்குள் எடப்பாடி கொண்டுவந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் பாக்யராஜ் இங்கே வந்திருக்கிறார் என்றால், அப்ப அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லையா??? ஒன்னுமே புரியலயே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக












Click it and Unblock the Notifications