கோவை, நீலகிரி ரெடியா.. மிக கனமழை பெய்யுமாம்! வெளியான 12 மாவட்டங்களின் லிஸ்டு - அப்போ சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Very heavy rainfall may occur in Kovai and Nilgris - Chances of rain in 12 districts

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Very heavy rainfall may occur in Kovai and Nilgris - Chances of rain in 12 districts

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை தெற்கு (மதுரை) 10, திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு) 5, பொன்னமராவதி (புதுக்கோட்டை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 4, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மதுராந்தகம். (செங்கல்பட்டு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி) தலா 3, திருமயம் (புதுக்கோட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி), தல்லாகுளம் (மதுரை), மேல் கூடலூர் (நீலகிரி), செங்கல்பட்டு, தேவாலா (நீலகிரி), உசிலம்பட்டி (மதுரை), துவாக்குடி (திருச்சி), சென்னிமலை (ஈரோடு), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 2, க்ளென்மார்கன் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), கிராண்ட் ஆனைகட் (தஞ்சாவூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), சிங்கம்புணரி (சிவகங்கை), சிறுகுடி (திருச்சி), நெல்முக்கு (திருநெல்வேலி), திருத்தணி PTO (திருவள்ளூர்), ஊத்து (திருநெல்வேலி), மதுரை வடக்கு, மதுரை விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பெரியார் (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), ஆயிக்குடி (தென்காசி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தேக்கடி (தேனி), லால்குடி (திருச்சி), பெரியபட்டி (மதுரை), பாபநாசம் (திருநெல்வேலி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), காக்கச்சி (திருநெல்வேலி), சூலூர் (கோயம்புத்தூர்) தலா 1 சென்டிமீட்டர் அளவு மழை பதிவானது." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+