Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்தம்பிக்கும் சென்னை புறநகர்.. ஒரே நேரத்தில் ஊர் திரும்பும் மக்கள்.. மிக கடுமையான டிராபிக் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில், ஜிஎஸ்டி சாலை எனப் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் நாடு முழுக்க பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் அதைத் தொடர்ந்து லாங் வீக்எண்ட் எனத் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பினர்.

traffic Pongal 2026

பொதுமக்கள் சிரமமின்றிச் சொந்த ஊர்களுக்குச் செல்லச் சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட்டனர். இதன் மூலம் கடந்த வாரம் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் பொங்கல் காலகட்டத்தில் சென்னை நகரே கிட்டத்தட்ட காலியானது எனச் சொல்லலாம். அந்தளவுக்கு வெறிச்சோடி இருந்தது.. இப்போது பொங்கல் லீவ் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் மக்கள் சென்னைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையே பொதுமக்கள் மெல்ல சென்னைக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

இன்று திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் பலரும் சென்னைக்குத் திரும்புவதால் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. இருப்பினும், அதை தாண்டி சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மதுராந்தகம், ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே இருக்கிறது.

சாலைகளில் மட்டுமின்றி ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்ப ஏதுவாக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்துச் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், அதிலும் டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் பொதுப் பெட்டியிலும் பயணிக்கிறார்கள். இதனால் ரயில்கள் முழுக்க கூட்டம் இருக்கிறது. பேருந்துகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான். அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

இன்றைய தினம் காலை போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் சென்னை புறநகரில் வாகனங்கள் நத்தை வேகத்திலேயே நகர்கிறது. நாளைய தினமும் கூட பொதுமக்கள் பலரும் சென்னை திரும்புவார்கள் என்பதால் நாளை காலையும் இதேபோன்ற நிலையே இருக்கும். எனவே, சென்னை திரும்பும் பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதே சரியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+