தீபாவளி முடிஞ்ச மறுநாளே.. இப்படியா.. ரேஷன் கடைகளுக்கு போன முக்கிய உத்தரவு.. சிலிர்த்து போன மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகை காரணமாக ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று ரேஷன் கடைகள் அரசு விடுமுறை காரணமாக இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை ஈடுகட்ட வேறு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை என்று அறிவித்து உள்ளது. நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் நேற்று சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

விடுமுறை : பல குடும்பங்களில் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட இந்த போனஸ் மிகவும் முக்கியமாக உதவும். அதேபோல் 1000 ரூபாய் உரிமை தொகையும் இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்கப்பட்டது. முன்கூட்டியே 10ம் தேதி உரிமைத்தொகை அளிக்கப்பட்டது.
இந்தாண்டு நேற்று நவ. 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை அதாவது இன்று, தமிழ்நாடு அரசு விடுமுறை விட உள்ளதாக அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ரேஷன் கடைகள்; இதை ஏற்றுக்கொண்டு தற்போது பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை காரணமாக ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கூடுதல் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கு நவ.3 மற்றும் நவ. 10 தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் நவ.13 மற்றும் நவ.25 ஆகிய நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்துகள்: மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் நேற்று மாலையில் இருந்து ஊர் திரும்பும். இன்றும் இவை சென்னை, கோவை போன்ற நகரங்களை நோக்கி திரும்பும்.
பல்வேறு அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications