அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்லை.. இந்த 8 தொகுதிகளில் செம்ம பைட் கன்பார்ம்.. மோதப்போகும் த(ம)லைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போடி, சைதாப்பேட்டை, தொண்டாமுத்தூர், கரூர், வேப்பனஹள்ளி, கோவில்பட்டி, நெல்லை, கோவை தெற்கு ஆகிய 8 தொகுதிகளில் மிகமிக வலுவான போட்டி இருக்க போகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவை தொடர்ந்து எதிர்க்கட்சியான திமுகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மற்றும் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி ஆகியவை தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

திமுக இன்று 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு முறையும் பலமான வேட்பாளர்கள் உள்ள தொகுதியில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துவது கட்சிகளின் வழக்கம். ஆனால் இந்த முறை திமுகவும் சரி, அதிமுகவும் சரி, வலுவான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த முறை வலுவான போட்டி பல தொகுதிகளில் இருக்க போகிறது.

சளைத்தவர்கள் அல்ல

சளைத்தவர்கள் அல்ல

இருப்பினும் போடி, சைதாப்பேட்டை, தொண்டாமுத்தூர், கரூர், வேப்பனஹள்ளி, கோவில்பட்டி, நெல்லை, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் மிகமிக வலுவான போட்டி இருக்க போகிறது. ஏனெனில் இந்த 8 தொகுதிகளிலுமே வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அதனால் யார் வெல்வார்கள் என்ற பேரார்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை வென்றுள்ள போடிநாயக்கநல்லூரில் அவரை எதிர்த்து திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதேபோல் தொண்டாமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து திமுக சார்பாக சிவசேனாதிபதி களமிறங்குகிறார்.

கரூர்

கரூர்

கரூரில் போக்குவரத்து துறை அமைச்ர் எம்.ஆர் விஜய் பாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி களமிறங்குகிறார். சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார். திருநெல்வேலியில் திமுக சார்பில் எ.எல்.எஸ்.லட்சுமணன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் யார் போட்டியிட உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் நயினார் நாகேந்திரன் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இதேபோல் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து, அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், அங்கு பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. திமுக சார்பில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மேலே சொன்ன 8 தொகுதிகளுமே மிகமிக வலுவான போட்டி இருக்கும். இங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மே 2ம் தேதி யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+