சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் நல்லக்கண்ணுவிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறியது. இதையடுத்து, அக்டோபர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதையடுத்து, ஒரு வாரத்தில் அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல் நலம் தேறியதால் சில நாட்களில் வீடு திரும்பினார். வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நல்லகண்ணுவின் உடல் நிலை இன்று மீண்டும் பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
நல்லகண்ணுவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணுவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உடல் நலம் தேறி ஓரிரு நாளில் நல்லகண்ணு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லகண்ணு உடல் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications