’அபூர்வ சகோதரர்கள்’ உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய சீனிவாச ராவ் காலமானார்.. ரசிகர்கள் சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 95. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாச ராவ் காலமானார். உலக நாயகன கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 1974-ல் தமிழில் இயக்கிய முதல் படமான திக்கற்ற பார்வதி படத்திற்காக தேசிய விருது பெற்றவர். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வயது மூப்பு காரணமாக உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று, சீனிவாச ராவ் காலமானார்.

director Singeetam Srinivasa Rao dies


ஆதித்யா 369

1974-ல் தமிழில் இயக்கிய முதல் படமான திக்கற்ற பார்வதி படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். கமல் நடித்த ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தவரான சிங்கீதம் சீனிவாச ராவ், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று திரையுலகில் கவனம் பெற்றார்.

காதலா காதலா, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களையும் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் டைம் டிரவல் படமான ஆதித்யா 369 என்ற படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். அதுமட்டும் இன்றி கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை தென்னிந்திய சினிமாக்களில் புகுத்தி வெற்றி படங்களை கொடுத்தார்.

தேசிய திரைப்பட விருது

மாயாபஜார் படத்தை இயக்கிய கேவி ரெட்டியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சீனிவாச ராவ், பின்னர் சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இயக்குநராக 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். 1985 ஆம் ஆண்டு வெளியான 'மயூரி' திரைப்படம், நடனக் கலைஞர் சுதா சந்திரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் பல்வேறு விருதுகளை வென்றதுடன், நந்தி விருதுகளில் சாதனை எண்ணிக்கையிலான விருதுகளை பெற்றது.

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு புஷ்பக விமானம் என்ற படத்தை இயக்கியிருந்தார். கமல்ஹாசன் நடித்து இருந்த படத்தில், வசனங்கள் இல்லாமல் கதை சொல்லப்பட்டு இருக்கும். இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. தெலுங்கு திரையுலகில் 'ஆதித்யா 369' திரைப்படம் அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அமைந்தது.

94 வயதில் சிங்கீதம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து இருந்தது. சீனிவாச ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+