தினமணி முன்னாள் ஆசிரியர் இராம திரு.சம்பந்தம் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி காலமானார்!
சென்னை: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மறைந்த முதுபெரும் பத்திரிகையாளர், இதழியல் முன்னோடி இராம திரு.சம்பந்தம் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (வயது 83) சென்னையில் இன்று காலமானார். மறைந்த கண்ணாத்தாள் ஆச்சியின் உடல் சென்னை போரூர் ஶ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதுபெரும் பத்திரிகையாளர், இன்றைய முன்னணி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் பலரையும் உருவாக்கிய ஆசான் இராம திரு.சம்பந்தம், கடந்த 2007-ம் ஆண்டு காலமானார். ஆசிரியர் இராம திரு.சம்பந்தம் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில் கண்ணாத்தாள் ஆச்சி காலமானார்.

ஆசான் இராம திரு.சம்பந்தம் தமது உடலை போரூர் ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார். அதைப் போலவே கண்ணாத்தாள் ஆச்சியின் கண்கள், உடல் ஆகியவை போரூர் ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. எண்ணற்ற பத்திரிகையாளர்களை உருவாக்கிய ஆசான் இராம திரு.சம்பந்தம் அவர்களது மனைவி கண்ணாத்தாள் ஆச்சியின் மறைவுக்கு நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications