சினிமா தயாரிப்பாளர் நடிகர் கலைப்புலி ஜி சேகரன் காலமானார்!
சென்னை: தயாரிப்பாளரும், நடிகருமான கலைப்புலி ஜி சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 'யார்?', 'ஜமீன் கோட்டை' போன்ற படங்களை தயாரித்தவர் கலைப்புலி ஜி சேகரன். சில படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.
சினிமா விநியோகஸ்தராக திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஜி.சேகரன். பின்னர் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக ஆனார். 1985 ஆம் ஆண்டு வெளியான 'யார்' படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

கலைப்புலி ஜி சேகரன், 1988 ஆம் ஆண்டு 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்' படத்தை இயக்கினார். 'காவல் பூனைகள்', 'உளவாளி' என அடுத்தடுத்து சில படங்களை இயக்கினார். விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் கலைப்புலி ஜி.சேகரன்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைப்புலி ஜி. சேகரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications