செண்பகமே செண்பகமே! பட்டிதொட்டியெல்லாம் பரவிய பாடல்.. மெல்லிய குரலில் மயக்கிய ஆஷா போஸ்லே
சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் தனித்துவமான குரல், இசை உலகை பல தசாப்தங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. 80 களின் இறுதிகளில் தொடங்கி 90 கள் வரை தமிழில் பல மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் சில பாடல்களின் பட்டியலை பார்க்கலாம்.
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று இருதய அடைப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்டியாக் அரஸ்ட் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஆஷா போஸ்லேவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் ஆஷா போஸ்லே மனதை லயிக்க வைத்த பல பாடல்களை பாடியுள்ளார். ஆஷா போஸ்லே பாடி தமிழில் ஹிட் அடித்த சில பாடல்களை இங்கே பார்க்கலாம்..
"ஓ பட்டர்ஃபிளை" - மீரா படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் 1992-ல் வெளியான மீரா திரைப்படத்தில் இடம்பெற்றதாகும். எஸ்பி பால சுப்பிரமணியனுடன் இணைந்து இந்த பாடலை ஆஷா போஸ்லே பாடியிருருப்பார். ஆஷா போஸ்லேவின் மெல்லிய குரலும் இந்த பாடலை 70, 80 கிட்ஸ்களின் பிளே லிஸ்டில் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக உள்ளது.
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக்கூடாதா.. ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் பாடல்கள் அப்போது பிரபலமாக இருந்த எப் எம்களில் ஒலிக்காத நாளே இல்லை எனவும் சொல்லும் அளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகியிருந்தது.
சென்பகமே செண்பகமே.. ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடல். 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அனைத்துமே ஹிட் தான். அதிலும் சென்பகமே பாடல் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களில் ஒன்றாகும்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம் பெற்ற சாத்து நட சாத்து.. குளிர்காற்றுத்தான் பார்த்து என்ற பாடல்.. 90 களில் மிகவும் ஹிட் அடித்த பாடல்களில் ஒன்றாகும். இந்த பாடலுக்கு ஏற்ற சூழலுக்கு தகுந்தபடி ஆஷா போஸ்லே தனது தனித்துவமான குரலால் கூடுதல் வலு சேர்த்து இருப்பார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications