பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. ரசிகர்கள் சோகம்!
சென்னை: பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் நேற்று இரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை ராமபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிர் பிரிந்தது. கடந்த 1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தக்ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றினார். குணச்சித்திர வேடம், வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
குணச்சித்திர வேடங்களில் மட்டும் இன்றி நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனி முத்திரை பதித்தவர் டெல்லி கணேஷ். அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ், கமல்ஹாசனும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் முதல் தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் உடலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications