இயற்கையின் காதலர் வெற்றி துரைசாமி.. இன்ஸ்டாவில் ரசனையான புகைப்படங்கள்.. இதெல்லாம் இவர் எடுத்ததா?
சென்னை: இயற்கையை அதிகம் நேசித்தவர் வெற்றி துரைசாமி. இயற்கையின் காதலரான அவர் விலங்குகளையும் பறவைகளையும் ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்துள்ளார். இமாசலபிரதேசத்தில் இயற்கையின் மடியிலேயே மறைந்து போன வெற்றி துரைசாமி எடுத்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
அரசியல்வாதிகள் பலர் திரைப்படத்துறையில் இருந்தாலும் சட்லெஜ் நதியின் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமி புகைப்படக்கலைஞராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு “என்றாவது ஒரு நாள்” என்ற திரைப்படத்தை வெற்றிதுரைசாமி இயக்கியிருந்தார்.

நிஜத்தில் மனிதநேயம் கொண்டவராக இருந்த வெற்றி துரைசாமி, தன்னுடைய முதல் திரைப்படத்திலும் அதனை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர்கள் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு 43 விருதுகளை வென்றது.
இயற்கையின் மீதும் விலங்குகள், பறவைகள் மீதும் தீராத காதல் கொண்டவராக இருந்த வெற்றி துரைசாமி, சட்லெஜ் நதியின் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி மரணிக்கும் முன்பு வரை இயற்கையின் அழகை தேடித்தேடி ரசித்து புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது புகைப்படங்களை பார்க்கும் போது இயற்கை மீது தீராக்காதல் கொண்டவராக இருந்த வெற்றிதுரைசாமி, இயற்கை ஆர்வலராகவும், ஒரு சாகச விரும்பியாகவும் இருந்துள்ளார் என்பதை உணரலாம். இயற்கையின் காதலராக ஒவ்வொரு நொடிப்பொழுதும் ரசனை மிக்கவராக இருந்த வெற்றி துரைசாமி, கடைசியில் இயற்கை அன்னையின் மடியிலேயே தனது இறுதி மூச்சினை விட்டுள்ளார். சலசலத்து ஓடும் சட்லெஜ் நதியில் அவரது இறுதி மூச்சு கலந்துள்ளது.

மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறார் வெற்றி துரைசாமி. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கையோடு சேர்ந்து பயணித்த அவர், தான் எடுத்த புகைப்படங்களில் பல்வேறு உயிர்களின் வாழ்வியலை ரசித்து ரசித்து பதிவிட்டுள்ளார். அவர் எடுத்த இதெல்லாம் இவர் எடுத்த புகைப்படங்களா என்று ஆச்சரியத்தோடு பலரும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications