'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' வேளாண் பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர் வினோத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் வினோத் சட்டசபையில் அறிவித்தார். இதேபோன்று, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் அமைச்சர் வெளியிட்டார். அந்த வகையில், வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டத்தையும் அறிவித்தார். வேளாண் அமைச்சர் கூறியதாவது:-

Vetri Illatharasi home garden scheme Minister Vinoth springs a surprise in the Agriculture Budget

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்'

வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைந்துள்ளது.

எனவே, நகர்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் வீட்டை சுற்று அமைந்துள்ள இடங்களிலும் செங்குத்து தோட்டம் மற்றும் நீரியியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மற்றும் மூலிகை செடிகள் அமைத்து மன மலர்ச்சியையும் வளமான சூழலையும் ஏற்படுத்த "வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்" நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்.

வெற்றி விவசாயி விருது

நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள், 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+