வெற்றி பயணம் திட்டம்.. தொடங்கும் சோதனை ஓட்டம்.. மகளிருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளது தவெக. 100 நாள் சாதனை என்று தவெக தங்கள் சாதனைகளை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த 100 நாட்களில் ஏராளமான சர்ச்சைகளும் இருக்கவே செய்கிறது. அரசு நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்று திமுக ஆட்சியில் திட்டம் கொண்டு வந்தனர். அதை புறநகர் பகுதிக்கும் விரிவாக்ககம் செய்யும் திட்டத்தை தவெக கொண்டு வரவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வருகிற 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை தவெக அளித்தது. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வருகிற 28 ஆம் தேதி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தவெக அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி, 3 சிலிண்டர் இலவசம் அறிவிப்பு விவாதமாகியுள்ளது.

vetri payanam travel

வெற்றி பயணம் விரிவாக்கம்

இந்நிலையில் மகளிர் இலவச பயணத்திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து, சட்டசபையின் விதி எண் 110 இன் கீழ் முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி 12,692 பேருந்துகளில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மொத்தம் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மகளிர் வெற்றி பயணம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் விஜய் விரிவான கருத்துகளை கேட்டார். திமுக ஆட்சியில் விடியல் பயணம் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது, என்ன சிக்கல் இருந்தது, விரிவாக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன, அதை சரி செய்யவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேம்படுத்தி அமல்

அதன்படி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், அரசுப் பேருந்துகள், புறநகர் பேருந்துகளில் மகளிர் வெற்றிப் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரிவாக்க திட்டத்தை விஜய் தொடங்கி வைப்பார். முன்னதாக வெற்றி பயணத் திட்டத்திற்காக செப்டம்பர் 27 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. அதில் கிடைக்கிற ஆலோசனை அடிப்படையில் திட்டம் மேம்படுத்தி அமல் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+