Kanimozhi: "வெற்றி மின்வெட்டு" ஒரே போட்டாவில் விஜய் அரசை மொத்தமாக டேமேஜ் செய்த திமுக எம்பி கனிமொழி
சென்னை: மின்வெட்டு பிரச்சினை தமிழகத்தில் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவுட்டுள்ள போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. "வெற்றி மின்வெட்டு" என்று பதிவிட்டு இந்திய வரைபடத்தில் தமிழகம் மட்டும் இருளில் மூழ்கி இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழகம் முழுக்க மின்வெட்டு இருந்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் மின்வெட்டால் கடும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என்றும், இதனால் பெரியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், குழந்தைகள் எக்ஸாமுக்கு கூட சரியாக படிக்க முடிவதில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

அதே நேரம் மின்வெட்டை சரி செய்ய வேண்டிய அமைச்சரோ, காற்றாலை மின் உற்பத்தி சரிந்துவிட்டது.. அதனால் கரண்ட் இல்லை.. பியூஸ் கேரியரை தூக்கிச்செல்வதால் மின்வெட்டு ஏற்படுகிறது.. தமிழ்நாடு மட்டுமில்லை.. பக்கத்து மாநிலங்களிலும் மின்வெட்டு இருக்கு.. என சப்பை கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறார் என்றும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படி மாநிலம் முழுக்க திடீர் திடீரென ஏற்படும் மிண்ட்வெடால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று சென்னையில் மின்னகத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
ஆனால் இதுவும் ரீல்ஸ் எடுப்பதற்கு தான் என மக்கள் விமர்சிக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளும் மின்வெட்டு பிரச்சினையை கையில் எடுத்து விமர்சித்து வருகிறார்கள். திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியும், "வெற்றி மின்வெட்டு" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்திய வரைபடத்தில் தமிழகம் மட்டும் இருளில் மூழ்கியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். கனிமொழியின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தவெக அரசு எதற்கெடுத்தாலும் வெற்றி என்ற பெயரை திட்டத்தின் பெயராக சேர்த்து வரும் நிலையில் அதை விமர்சிக்கும் விதமாகவே கனிமொழி எம்பியும் தவெக ஆட்சியில் வெற்றி மின்வெட்டு என்று திட்டம் கொண்டு வந்து இருக்கிறார்களோ? என விமர்சிக்கும் வகையில் இந்த பதிவினை போட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
தவெக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை.. கடந்த ஆட்சியில் இருந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயரை மட்டும் மாற்றி வைத்து வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய இதுவரை எந்த ஒரு முன்னேற்பாடையும் அரசு செய்யவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
