CJP போராட்டம்.. மத்திய அரசின் தோல்வி இது.. நம்மை கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி! விளாசிய வெற்றிமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்க பார்க்கிறார்கள் என்று இயக்குநர் வெற்றிமாறன் விமர்சித்துள்ளார். மாணவர்களின் போராட்டம் என்பது மத்திய அரசின் தோல்வி என்று கூறியுள்ள வெற்றிமாறன், நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி காக்ரோச் ஜனதா கட்சி பேரணியாக சென்ற போது, மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Vetrimaaran

அவர்களின் முதன்மை கோரிக்கையாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே இருக்கிறது. மாணவர்களின் போராட்டம் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பரவி இருக்கிறது. நேற்று முழுவதும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மெரினாவில் போராடும் மாணவர்கள் கூடிவிடக் கூடாது என்பதற்காக தவெக அரசு மூடி இருக்கிறது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.இரஞ்சித், அமீர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன், நடிகை ரேவதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், மாணவர்களின் போராட்டத்திற்கு எங்களின் ஆதரவை வழங்குகிறோம்.

ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால், அந்நாட்டில் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பதுதான் அர்த்தம். ஒரு மாணவர் போராட்டம் என்பது அரசின் தோல்வி. காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் மத்திய அரசின் தோல்வி. அவர்களின் போராட்டம் நீட் தேர்வு ரத்துக்கானதாக மாற வேண்டும். அந்த முன்னெடுப்புகளை நாம் கொண்டு சொல்ல வேண்டும்.

நீட் தேர்வுக்கான அழுத்தம் என்ன என்பதை நானும் நேரடியாக பார்க்கிறேன். என்னுடைய நண்பனின் குழந்தை அதிக மதிப்பெண் எடுத்த போதும் கூட, அவனால் நீட் தேர்வில் பாஸ் செய்ய முடியவில்லை. அதாவது அவனின் தந்தையால் கட்டணம் கட்டும் அளவிற்கான கல்லூரியில் சேரும் அளவிற்கான மதிப்பெண்ணை எடுக்க முடியவில்லை.

நீட் தேர்வு மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுப்பதும், மருத்துவ அறிவை எடுப்பதும் தான் அவர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கிறது. நீட் தேர்வு ரத்து குறித்து தொடர்ந்து பேசி கொண்டே இருக்கிறோம். நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+