வெற்றிமாறன் சகோதரியா இவர்? வெயிட் லிஃப்டிங் மங்கை டாக்டர் வந்தனா
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் சகோதரி வெயிட்லிப்ஃடிங் செய்வதில் வல்லவராக இருப்பது அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனின் சகோதரி வந்தனா ஒரு டாக்டர் என்பதே பலருக்கும் தெரியாத விசயம். அவர் ஒரு வெயிட் லிஃப்டர் என்பது அதைவிட ஆச்சரியமான விசயம். பலருக்கும் இந்த விசயம் தெரியாது. ஆண்களே தூக்கத் தயங்கும் சில உடற்பயிற்சி கருவிகளை இவர் சாதாரணமாக எடுத்துக் கையாளுகிறார். அந்தளவுக்கு அவரது உடலையும் அவர் சரியாக வைத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் தனது உடலை ஃபிட் ஆக வைத்திருப்பவர். அவரைப் பார்க்கும்போது அதைப் பலரும் உணரலாம். இளம் வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்த அவர், எப்படி அதை உடனடியாக தூக்கி எறிந்தேன் என்று பேசிய ஒரு வீடியோ பலரை நல்வழிப்படுத்த உதவி இருக்கிறது. சகோதரர் எந்தளவுக்கு பாசிடிவ் வைப் ஆக இருக்கிறாரோ அதே அளவுக்கு வைப் ஆக இருக்கிறார் வந்தனா.
தினமும் ஜிம் போய்விடுவேன் என்று சொல்லும் இவர், 'முதலில் அது ஒரு வேலையாகத் தெரியும். போகப் போக அது ஒரு பழக்கமாக மாறிவிடும். அதற்கு உங்களை நீங்கள் ஒப்புக் கொடுத்து விடுவீர்கள்’ என்கிறார் இந்த மருத்துவர். அதேபோல் மாலை உணவுப் பழக்கத்தை 6 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது என்றும் இரவு 2 மணிக்குப் போய் பிரியாணி சாப்பிடுவது எல்லாம் உடல்நலத்திற்கு கேடு என்றும் சொல்கிறார்.
ஒரு அதிகாலை வேளையில் வெயிட் லிப்ஃட் செய்தபடி அந்த அனுபவங்களைப் பேசிய உள்ள வந்தனா, உச்சி முதல் உள்ளங்கால் வரை எந்தளவுக்கு உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அதேபோல தனது உணவுக் கட்டுப்பாடுகள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். சொல்லப் போனால் வெற்றிமாறனுக்கே இந்த டிப்ஸ் எல்லாம் தெரியுமா என்பது சந்தேகப்படும் அளவுக்கு உள்ளார் இந்த டாக்டர். அவர் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்குப் பிரியாணி பிடிக்காது. ஏதோ வெயிட் லிப்ஃடிங் செய்வதால் பிரியாணி பிடிக்காது என்று நான் சொல்லவில்லை.
வழக்கமாகவே எனக்குப் பிடிக்காது. நாம் எந்தளவுக்குப் புரோட்டின் எடுத்துக் கொள்கிறோமோ அந்தளவுக்குத் தசை நன்றாக இறுக்கம் அடையும். புரோட்டின் எடுக்கும் போது கொழுப்பு குறையும். வயதாகும் போது தசைகள் தளர்ச்சி அடையும். அதைச் சரி செய்யத்தான் வெயிட் லிஃப்டிங் செய்கிறோம்.

பொதுவாகக் காலையில் எழுந்த உடன் 2 மணிநேரம் வரை காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக எலுமிச்சை ஜூஸ் அல்லது வேறு பழரசத்தைக் குடிக்கலாம். காபியைத் தவிர்ப்பது நல்லது. நான் ப்ளாக் காபிதான் குடிப்பேன். கடந்த 15 ஆண்டுகளாகச் சர்க்கரையை உட்கொள்வதே இல்லை.
அரிசி சாதம், பால் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக கைக்குத்தல் அரிசி, இயற்கை தானியங்களை எடுத்துக் கொள்வேன். மதிய சாப்பாட்டில் சிக்கன் இருக்கும். இல்லை என்றால் முட்டை, மீன் உணவுகள் எடுத்துக் கொள்வேன். கூடவே காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வேன்.
எனக்கு முன்பாகவே என் சகோதரர் வெற்றிமாறன் ஜிம் போக ஆரம்பித்துவிட்டார். அவரைப் பார்த்த பிறகுதான் நான் ஒர்க் அவுட் பண்ண ஆரம்பித்தேன். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. எந்த வயதிலும் தொடங்கலாம். எக்சர்சைஸ் செய்யத் தொடங்கியதிலிருந்துதான் உணவு மீது ஒரு விழிப்புணர்வு வந்தது. ஒரு கட்டத்திற்குப் பின் நம் உடம்பே சிலவற்றைச் சொல்லும். இதைச் சாப்பிடாதே என்று உணர்த்தும். அதை நாம் கேட்கவேண்டும். அப்போதும் அலட்சியம் செய்யக் கூடாது. உடற்பயிற்சி என்பது மிக அவசியம்.

வீட்டு வேலை செய்கிறோம், ஆகவே உடற்பயிற்சி தனியாகச் செய்ய வேண்டுமா? என்று நினைப்பது தவறு. ஜிம் போகும் போதுகூட கவனமாக ஒரு பயிற்சியாளர் ஆலோசனை மூலம் செய்ய வேண்டும். அனைத்திற்கு ஒரு முறை உள்ளது. நம் இஷ்டத்திற்கு ஈடுபடக் கூடாது. பிறகு அதுவே சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்" என்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications