ஒரு ஊராட்சிக்கு 8 பெண்கள்.. வெற்றி மகளிர் ஆடு வளர்க்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆடுகள் வழங்க ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3,493 கிராமங்களில், ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 30,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் தகுதிவாய்ந்த சுமார் 30,000 பேருக்கு வழங்கப்படவுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

Vettri Magalir Scheme 1 5 lakh Goats to Be Provided to 30000 Women

தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு ஒரு முக்கிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று சட்டசபையில் தமிழக நிதி அமைச்சர் செய்த பட்ஜெட் அறிவிப்பின்படி, இந்த திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டமாகும். கிராமப்புறங்களில் வாழும் ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

முதல் கட்டமாக சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 100 தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாக்குகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 3,493 கிராமங்களில், ஒரு ஊராட்சிக்கு 8 பேர் வீதம் மொத்தம் 30,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் 100% மானியத்தில் இலவசமாக வழங்கப்படும்.

அதாவது மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. ஒரு ஆட்டின் விலை ரூ.6,000 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பயனாளிக்கு 5 ஆடுகளுக்கு ரூ.30,000 வழங்கப்படும். இது தவிர ஆடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய ரூ.1500, தீவனம் வாங்க, கொட்டகை போட முதற்கட்ட ஊக்கத்தொகையாக ரூ.2500, ஒரு வருடம் வளர்த்த பின் ஊக்கத்தொகையாக ரூ.2000 என அனைத்தும் அரசே ஏற்கிறது. இந்த திட்டத்திற்காக தற்போது ரூ.109.75 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சி, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. விரைவில் ஒவ்வொரு பிளாக்கிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+