வண்டியில் அடுத்தடுத்து ஆட்கள் ஏற.. கடைசியில் பார்த்தால்.. ட்விஸ்ட்.. இணையத்தை உலுக்கிய ஒற்றை வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்த வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பார்த்து குழம்பிப்போய் உள்ளனர்.

Recommended Video

    வண்டியில் அடுத்தடுத்து ஆட்கள் ஏற.. கடைசியில் பார்த்தால்.. ட்விஸ்ட்.. இணையத்தை உலுக்கிய ஒற்றை வீடியோ!

    இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகபட்சம் இன்னும் 10 வருடங்களில் இந்தியா சீனாவை மக்கள் தொகையில் முந்திவிடும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் இன்னும் போக்குவரத்து வசதிகள் அதிகம் செய்யப்படவில்லை. பல மாநிலங்களில் பொதுப்போக்குவரத்து சரியாக இல்லை.

    ரயில், பேருந்து போன்றவற்றில் இதனால் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரே வாகனத்தில் பலர் நெருக்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை பல இடங்களில் நிலவுகிறது.

    வீடியோ

    வீடியோ

    இந்த நிலையில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    அந்த வீடியோவில் முதலில் ஆண் ஒருவர் பைக்கில் ஏறுகிறார். அவரை தொடர்ந்து அவருக்கு முன் பக்கம் பெட்ரோல் டேங்கில் சிறுமி ஒருவர் அமருகிறார். பின்னர் அந்த சிறுமிக்கு அருகில் பெட்ரோல் டேங்கில் இன்னொரு சிறுமி அமருகிறார். இந்த இரண்டு பேரும் முன்னாள் அமருவதற்கு அங்கு இருக்கும் பெண்கள் இரண்டு பேர் உதவி செய்கிறார். முன்னாள் இரண்டு சிறுமிகளும் அடுத்தடுத்து நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள்.

    கூட்டம்

    கூட்டம்

    இதையடுத்து பின் இருக்கையில் பெண் ஒருவர் அமருகிறார். அவர் அமர்ந்த உடன் கீழே நிற்கும் இன்னொரு பெண் கீழ் உள்ளே இன்னொரு குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுக்கிறார். அந்த பெண் குழந்தையை மடியில் வைத்துக்கொள்கிறார். வீடியோ பார்க்கும் யாராக இருந்தாலும் சரி அவ்வளவுதான் வண்டியை எடுப்பார்கள் என்றுதான் நினைப்போம். ஏனென்றால் வண்டியில் ஏற்கனவே 5 பேர் அமர்ந்துவிட்டனர். ஆனால் அங்குதான் பெரிய ட்விஸ்டே.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அதன்பின்தான் அந்த இன்னொரு பெண்ணும் திடீரென வண்டியில் ஏறி பின் சீட்டில் அமருகிறார். அதோடு இல்லாமல் கீழே உள்ள இன்னொரு குழந்தையை தூக்கிக்கொண்டு தனது மடியில் அமர வைத்துக்கொள்கிறார். அதாவது முன் சீட்டில் இரண்டு குழந்தைகள். பின் சீட்டில் இரண்டு பெண்கள். அவர்கள் இருவரின் கைகளில் தலா ஒரு குழந்தை என்று மொத்தம் 7 பேர் இந்த வண்டியில் அமர்ந்து உள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

    மக்கள் தொகை

    மக்கள் தொகை

    நெட்டிசன்கள் மத்தியில் இந்த வீடியோ ஹிட் அடித்து உள்ளது. எப்படி ஒரே ஆண் வண்டியில் தன்னையும் சேர்த்து 7 பேரை சுமந்து கொண்டு செல்ல முடியும். இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா இதை பகிர்ந்து, பேச்சே வரவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நெட்டிசன்கள் பலர் இது இந்தியா. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு, ஆனால் கார் வாங்கும் பொருளாதாரம் எல்லோரும் இல்லை என்பதால் இப்படி பைக்கில் செல்ல வேண்டி உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+