போனை வாங்கியதும்.. நேராக "அந்த" ஆப்பை திறந்த குரங்கு! குழம்பி போன மக்கள்.. தலை சுற்ற வைக்கும் வீடியோ
சென்னை: குரங்கு ஒன்று போன் பயன்படுத்தும் வீடியோ இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
Recommended Video
மனிதர்களை போல தற்போது விலங்குகளும் போன்களுக்கு அடிமையாக தொடங்கிவிட்டன. சமீபத்தில் கூட அமெரிக்காவில் சிகாகோவில் இருக்கும் லிங்கன் பார்க் விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா குரங்கு ஒன்று போனுக்கு அடிமை ஆனதாக செய்திகள் வந்தன.
16 வயது நிரம்பிய அமேரா என்ற குரங்கு அங்கு செல்போன் பார்க்க அடிமை ஆகி உள்ளது. அந்த அமேரா குரங்கு சொந்தமாக போன் வைத்திருக்கவில்லை.

குரங்கு
அந்த குரங்கிடம் அங்கு கண்ணாடி ஸ்கிரீன் மூலம் போன் வீடியோக்களை காண்பித்துள்ளனர். முக்கியமாக குரங்கு வீடியோக்களை காண்பித்துள்ளார். இந்த நிலையில்தான் இன்னொரு குரங்கு ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய போனை குரங்கிடம் கொடுக்கிறார். அந்த போனை குரங்கு வாங்கியதும் இன்னும் 2 குரங்குகள் வந்து அதை பார்க்கின்றன.

போன்
இந்த மூன்று குரங்குகளும் போனை ஸ்க்ரால் செய்து அதை பயன்படுத்த தொடங்கி உள்ளன. அதோடு நிற்காமல் நேரடியாக அதில் ஒரு குரங்கு பேஸ்புக் செயலியை திறந்து உள்ளது. தெரிந்து திறந்ததோ, தெரியாமல் திறந்ததோ தெரியவில்லை.. ஆனால் பேஸ்புக்கை திறந்து அதை ஸ்க்ரால் செய்ய தொடங்கி உள்ளது. நீண்ட நேரம் அந்த பேஸ்புக் பக்கத்தை குரங்கு பார்த்துள்ளது. அதிலும் அந்த குரங்குகள் போனை ஸ்க்ரோல் செய்யும் விதம்தான் கவனம் பெற்றுள்ளது.

வீடியோ
அப்படியே மனிதர்கள் போலவே குரங்குகள் போனை ஸ்க்ரோல் செய்துள்ளன. இந்த வீடியோதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. கண்கள் முழுக்க ஆர்வத்தோடு அந்த குரங்குகள் போனை நோண்டிக்கொண்டு இருக்கின்றன. அருகில் இருந்து குரங்கின் செயலை பார்த்த நபர்களுக்கு இந்த செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

வீடியோ
177,000 பேர் இணையத்தில் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 4,100 பேர் இதை லைக் செய்துள்ளனர். இதில் கமெண்ட் செய்த பலர் குரங்குகள் நாம் நினைப்பதை விட புத்திசாலிகள். பிளானெட் ஆப் தி எப்ஸ் படத்தில் வருவது போல் எதிர்காலத்தில் குரங்குகள் உலகத்தை கட்டுப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலரோ குரங்கு கையில் போனை கொடுத்து அதையும் கெடுக்க வேண்டாம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications