என்ன ஹைட்டு.. மேலே எழும்பி வந்த ராட்சச கடல் அலை.. அப்படியே மேகத்தை தொட்டதா? உண்மை என்ன? - வீடியோ
சென்னை: கடல் அலை ஒன்று மேலே எழுந்து அப்படியே மேகத்தை தொடுவது போன்ற வீடியோ ஒன்று இணையம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கடல் பல ஆச்சர்யங்களை கொண்டது. மனிதன் செவ்வாய் கிரகத்திலும், பல்வேறு கிரகங்களிலும் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றான்.
இதில் பல கண்டுபிடிப்புகளையும் கூட நிகழ்த்தி உள்ளான். ஆனால் மனிதன் இன்னும் நிகழ்த்தாத பல கண்டுபிடிப்புகள் கடலுக்கு அடியே உள்ளன.

கடல்
கடல் எப்போதும் விசித்திரம்தான். கடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இப்படி பல விநோதங்களை சுமந்து நிற்கும் கடல் பற்றிய வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கடலில் இருந்து பெரிய அலை ஒன்று எழுந்து வந்து மேகத்தை தொடுவது போன்ற காட்சிகள் இதில் அமைந்துள்ளன. மேகத்தில் உரசி அதில் இருக்கும் நீர் திவலைகளை தொடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

ராட்சச அலைகள்
இந்த செய்தியில் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவை பாருங்கள். உங்களுக்கே புரியும். 40 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மேகத்தை கடல் அலைகள் தொடுவது போன்ற காட்சிகள் உள்ளன, மொத்தம் 7.50 லட்சம் பேர் இந்த வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளனர். Buitengebieden என்ற ட்விட்டர் பக்கம் மூலம் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. பலர் இந்த வீடியோவையோ பார்த்து பாருங்க அலைகள் எப்படி வருதுன்னு.. சூப்பர், செம என்று கமெண்ட் செய்துள்ளனர்.

வீடியோ அலைகள்
ஆனால் உண்மையில் இந்த வீடியோவில் கடல் அலைகள் தொடுவது மேகத்தை கிடையாது. கடல் அலைகள் தொடுவது எஸ்எஸ்ஏ என்று அழைக்கப்படும் sea aerosol ஆகும். அதாவது காற்றில் இருக்கும் கடல் நீர் திவலைகள் ஆகும். பொதுவாக நடுக்கடலின் மேல் பகுதியில் இது போல காற்று நீர் திவலைகள் காணப்படும். கடல் அலைகள் ஆவியாகும் போது. அவை மேகமாக மாறும் முன் இப்படி காற்று நீர் திவலைகள் காணப்படும்.

காற்று உரசுகிறது
அதேபோல் கடலும் காற்றும் உரசுவதால் ஏற்படும் பப்புலும் இந்த திவலைகள் ஏற்பட காரணமாக இருக்கும். இது பார்க்க கொஞ்சம் மேகம் போலவே இருக்கும். இதைத்தான் நெட்டிசன்கள் மேகத்தை கடல் அலைகள் தொடுவதாக கூறி இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த கடல் நீர் திவலைகள்தான் பூமியின் வானிலையை நிர்ணயிப்பதில், வானத்தின் கெமிக்கல் மாற்றங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications
