பிரபல "லேக் வியூ" அப்பார்ட்மெண்டில்.. பார்க்கிங் கார்களை அப்படியே அடித்து சென்ற வெள்ளம்! ஷாக் வீடியோ
சென்னை: சென்னையில் உள்ள பிரபல அபார்ட்மெண்ட் ஒன்றில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னை கால்வாய்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. இதனால் மழை நீர் வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட தண்ணீர் வெளியேறும் வழி இல்லாமல் உள்ளது. தண்ணீர் ரிவர்ஸ் ஆக கூடாது என்பதால் வடிகால்கள் தற்போது மூடப்பட்டு உள்ளன.

இதனால் இப்போதைக்கு சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீர் வெளியேறும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் ஓடும் தண்ணீர் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
சென்னை மழை: சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 6 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.
இரட்டை சதம்: சென்னையில் இரட்டை செஞ்சுரி: சென்னையில் பல இடங்களில் மழை முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உள்ளது. சில இடங்களில் மழை இந்த பருவகாலத்தில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உள்ளது. அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் விடாமல் மிக கனமழை பெய்து வருகிறது.
Apartment in Pallikaranai, Chennai
— vittoba.balaji (@balavittoba) December 4, 2023
Effect of #CycloneMichuang 😕😕
Stay safe chennai!!#ChennaiRain pic.twitter.com/txiJtrq1BQ
வளசரவாக்கம் 203.1, மலர் காலனி 194.7, பெருங்குடி 189.3, கோடம்பாக்கம் 179.4, சோழிங்கநல்லூர் 177.3, அடையார் 166.5, புழல் 165, பெருங்குடி 160.2, கொளத்தூர் 157.2, அம்பத்தூர் 152.4, தேனாம்பேட்டை 145.5, திரு.வி.கே நகர் 143.1, முகலிவாக்கம் 142.2, ஐஸ் ஹவுஸ் 141.6, அண்ணாநகர் 140.4 செமீ மழை ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது.
பிரபல அப்பார்ட்மெண்ட்: சென்னையில் உள்ள பிரபல அபார்ட்மெண்ட் ஒன்றில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கரணை பகுதியில் அமைந்து உள்ள குடியிருப்பு ஆகும் இது.
சிட்டிபாபு நகருக்கு அருகே இந்த அபார்ட்மெண்ட் அமைந்து உள்ளது. மோங்க் லேக் என்ற ஏரிக்கு அருகே இந்த அபார்ட்மெண்ட் அமைந்து உள்ளது. இந்த அபார்ட்மெண்ட் கீழ் பார்க்கிங் தளத்தில் தண்ணீர் புகுந்து உள்ளது. ஏரி முழுமையாக நிரம்பி.. அங்கே எல்லை உடைந்து அப்படியே தண்ணீர் வெளியேறி அபார்ட்மெண்ட் உள்ளே வந்துள்ளது.
கீழே இருந்த பல கோடி மதிப்பிலான கார்கள் அப்படியே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தின் கொடூர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கார்கள் அப்படியே இழுத்து செல்லப்படும் காட்சிகள் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளன. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
2015க்கு பிறகு மிக பெரியளவில் இப்போது மழை பெய்துள்ளது. மழை இன்னும் விடாத காரணத்தால் மொத்தமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications