விண்வெளியில் பறக்க இருக்கும் இந்திய வீரர்கள்.. ககன்யான் திட்டத்திற்கு ரெடி! வெளியான மாஸ் வீடியோ
சென்னை: சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் பத்திரமாக தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் 40 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு இஸ்ரோ விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது. அதாவது, இந்தியா விண்வெளிக்கு சொந்தமாக, செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் அனுப்பியிருந்தாலும் மனிதர்கள் இதுவரை அனுப்பவில்லை. ஆனால் இந்தியாவை சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா கடந்த 1984ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது.
சோவியத் ரஷ்யாதான் விண்வெளி துறையை பொறுத்த அளவில் இந்தியாவுக்கு உற்ற நண்பன். கடந்த 1917ம் ஆண்டு தொடங்கி 1990ம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. நிலவில் முதலில் கால் வைத்தது மட்டும்தான் அமெரிக்கா செய்த ஒரே சாதனை. மற்றபடி முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளிக்கு முதலில் உயிரினங்களை அனுப்பியது, மனிதர்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என சோவியத் ரஷ்யா ஏராளமான சாதனைகளை செய்தது.

மட்டுமல்லாது இந்தியா போன்ற வளர்ந்து வந்த நாடுகளுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை தூண்ட இந்த நாடுகளிலிருந்து வீரர்களை சோவியத் ரஷ்யா தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு அழைத்து செல்ல முன்வந்தது. அப்படி இந்தியா சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பறந்தவர் தான் ராகேஷ் ஷர்மா. இதன் பின்னர் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் ஒரு இந்தியர் கூட விண்வெளிக்கு மீண்டும் போகவில்லை. எனவே இந்த ஏக்கத்தை போக்க ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயன்று வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இந்திய விமானப்படையை சேர்ந்த இந்த வீரர்கள், யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications