Robo Shankar: ரோபோ சங்கர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி.. சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகும் வீடியோ!
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு துணை முதல்வர், திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோபோ சங்கர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட ரோபோ சங்கர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோன்று கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தனார். 120 கிலோ அளவு்ககு உடல் எடை கொண்டிருந்த அவர், திடீரேன 40-50 கிலோ எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாவர் போல மாறியிருந்தார். அப்போது தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

மது பழக்கம் காரணமாக ரோபோ சங்கரின் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் திரைத்துறையினர் கூறியிருந்தனர். சிகிச்சை பலனளித்தது. ரோபோ சங்கர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். உடல் எடை முன்பு போலவே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சில மாதங்கள் அவர் மது அருந்தாமல் இருந்தார்.
ஆனால், மீண்டும் மது பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்து, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். தமிழக அரசு நடத்திய இளையராஜாவுக்கான இசை பாராட்டு நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் பங்கேற்றிருந்தார். அவர் பங்கேற்றிருந்த கடைசி நிகழ்ச்சி அதுதான். அதன் பின்னர் விஜய் டிவி செட்டில் திடீரென மயக்கமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனின்றி உயிரிழந்தார்.

உடலுக்குள் வரும் உணவு பொருட்களில் உள்ள நச்சு பொருட்களை தூய்மைப்படுத்துவதுதான் கல்லீரலின் பணி. உணவு பொருட்களில் நச்சு எனில், கெட்டுப்போன உணவு, ரசாயனம் அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, கலப்பட மசாலாக்கள் கொண்ட உணவு ஆகியவற்றை கல்லீரல் தூய்மைப்படுத்துகிறது. ஆனால் மது என்று வரும்போது, கல்லீரலின் பணிச்சுமை அதிகரிக்கிறது. ஏனெனில், மது உணவுப்பொருள் கிடையாது. எனவே மது அதிக அளவில் எடுக்கும்போது கல்லீரல் பாதிப்படைய தொடங்குகிறது.
கல்லீரலை பொறுத்தவரை, அது தொடக்கத்தில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்ததாது. முழுமையாக சேதமடைந்த பின்னர்தான் பாதிப்பை வெளிப்படுத்தும். எனவேதான் கல்லீரல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. ரோபோ சங்கருக்கு கல்லீரல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications