பரபரப்பான சூழல்.. பயணிகளை முந்தி விமான இருக்கைக்கு சென்ற விமானிக்கு சபாஷ்.. அப்படி என்ன செய்தார்?
Recommended Video

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் முதல் முறையாக தனது தாய் மற்றும் பாட்டியை அழைத்து கொண்டு செல்லும் விமானி, அதை இயக்குவதற்கு முன்னர் இருக்கைக்கு சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்தவர் பிரதீப் கிருஷ்ணன். இவரை விமானியாக ஆக்கி பார்க்க அவரது தாய், பாட்டி, சகோதரி ஆகியோர் ஆசைப்பட்டனர்.
இவர் சென்னை- சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் விமானியாக உள்ளார். இவர் 2007-ஆம் ஆண்டு முதல் சுமார் 11 ஆண்டுகளாக விமானியாக பணியாற்றி வருகிறார். மேலும் தனது மகன் இயக்கும் விமானத்தில்தான் முதன்முதலாக பயணிப்போம் என்பது அவர்களது கனவாக இருந்தது.

புறப்பட தயார்
அந்த கனவு 11 ஆண்டுகளுக்கு பிறகு நனவானது. இரு தினங்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் தாய், பாட்டி, சகோதரி ஆகியோர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது விமானம் புறப்பட தயாராக இருந்தது.
பதிவேற்றம்
அச்சமயம் விமானி அறையிலிருந்து விறுவிறுவென வந்தார் பிரதீப். அப்போது தாய், பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு விமானத்தை இயக்க சென்றார். இதுகுறித்த வீீடியோவை அவரது நண்பர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இதனால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பெருமிதம்
இந்த தருணம் நிச்சயம் சந்தேகமே இல்லாமல் ஒரு விலைமதிப்பில்லாத தருணமாகும். மகன் தங்களிடம் ஆசி வாங்கிவிட்டு திரும்பிய போது அவர்களது முகத்தில் பெருமிதத்தை பார்க்க முடிந்தது.

வெகுமதி
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பெரும்பாலானோர் இந்த சம்பவம் இதயத்தை தொடுவதாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அந்த தாய் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதால்தான் அதுபோன்ற ஒரு வெகுமதியை பெற்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications