5 மவுத் ஆர்கனை உடைத்த கோவை லட்சுமி.. ஆனா இப்ப தும்பிக்கையில் நம்பிக்கையுடன் 15 நிமிஷம் வாசிப்பாள்!
Recommended Video

சென்னை: 5 மவுத் ஆர்கன்களை உடைத்த யானை தற்போது தொடர்ந்து 15 நிமிடங்கள் மவுத் ஆர்கனை எடுக்காமல் வாசிக்கும் அசாத்திய திறன் படைத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து பல்வேறு கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து மறுவாழ்வு மையத்துக்காக யானைகள் தேக்கம்பட்டிக்கு ஆண்டுதோறும் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி அந்த முகாமில் உள்ள லட்சுமி என்ற யானை ஹாத்தி மேரே சாத்தி என்ற இந்தி படத்தில் 1971-ஆம் ஆண்டு நடித்துள்ளது.

இதன் தனித்திறமைகளாலேயே நடிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த யானைக்கு தும்பிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் 5 மவுத் ஆர்கன்களை சும்மா பிஸ்கெட் உடைப்பது போல் உடைத்து போட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து மனம் தளராமல் அதற்கு பயிற்சி அளித்ததன் விளைவு 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து மவுத் ஆர்கனை வைத்தால் எடுக்காமல் வாசிக்கும் என அதன் பாகன் பெருமிதம் பொங்க கூறுகிறார்.
இந்த யானை தமிழகத்தில் உள்ள இரட்டை திருப்பதி கோயிலுக்கு சொந்தமானது ஆகும். யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமை கடந்த 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா முன் முயற்சி எடுத்தார். இங்கு அவற்றுக்கு சிறந்த உணவு, உடல்நலம் ஆகியவை பேணி காக்கப்படும். மேலும் ஏதேனும் தொற்று, உடல் உபாதை இருப்பதையும் மருத்துவர்கள் சோதனை செய்வர்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications