பாஜகவை தொடர்ந்து விசிகவிலும் 'ஆபாச பேச்சு டேப்'.. திருமாவளவன் முன்னிலையில் மகளிர் அணி நிர்வாகி ஷாக்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சனாதனம் இருக்கிறது; விசிகவில் பெண்களை ஆண் நிர்வாகிகள் கடுமையாக திட்டி இருப்பதை ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன் என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜகவில் பெரும் புயலாக உருவெடுத்திருக்கிறது திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சு விவகாரம். பாஜகவின் பெண் நிர்வாகியை செல்போனில் அழைத்து ஆபாசமாக அர்ச்சனை செய்திருக்கிறார் திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யாவின் இந்த ஆபாச பேச்சு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்து விசாரணை கமிஷன் அமைத்தார்; அத்துடன் காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கி வைத்து உத்தரவிட்டார்.

பாஜகவில் பிரளயம்
மேலும் திருச்சு சூர்யாவின் ஆபாச பேச்சு தொடர்பாக ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலையிடம் புகார் கொடுத்தேன்; இது தொடர்பாக விசாரணை நடத்த 3பேரிடம் கொடுக்கப்பட்ட செல்போன் பதிவு விவகாரம், ஊடகங்களில் எப்படி வெளியானது என தெரியவில்லை எனவும் சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் நிர்வாகி டெய்சி கூறியிருந்தார். பாஜகவில் இந்த பிரச்சனை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசிகவில் பஞ்சாயத்து
இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இதேபோல ஒரு பஞ்சாயத்து எழுந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருமாவளவனும் பங்கேற்றார். விசிகவின் மகளிர் அணி சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதிர்ச்சி தந்த பேச்சு
இந்நிகழ்ச்சியில் பேசிய விசிக மகளிர் அணி செயலாளர் நற்சோனை, கட்சியின் ஆண் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆஃப் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விசிக நிர்வாகி ஒருவர் மைக்கை ஆஃப்செய்ய சென்றார்.

டேப் ரெக்கார்டு இருக்கு
அப்போது உக்கிரமான நற்சோனை, விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டமுடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் டேப் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் காட்டுகிறேன். ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை. ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம். இந்த கட்சிக்குள் (விசிகவுக்குள்) சனாதனம் இருக்கிறது. டாப் டூ பாட்டம் கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது என பேசிக் கொண்டிருந்த போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது. அப்போது கீழே அமர்ந்திருந்த பெண்கள் நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி












Click it and Unblock the Notifications