கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல்
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகள் என்னென்ன என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தனி தொகுதியும் 2 பொதுத் தொகுதியும் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் நேற்றைய தினம் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடத்த அறிவாலயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் சென்றிருந்தார்.

அங்கு பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திமுக பேச்சுவார்த்தையில் விசிகவின் 8 தொகுதிகள் அடையாளம் கண்டு உள்ளோம்.
திமுக- விசிக இடையே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. எந்தெந்த தொகுதிகள் என முறைப்படி முதல்வர் அறிவிப்பார்.
எங்களுக்கு திருப்திகரமாக பேச்சுவார்த்தை இருந்தது. விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன. அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பிறகு முதல்வர் நாளை (இன்று) அறிவிப்பார்.
திமுக கூட்டணியில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என காத்திருப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதால் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்துப் பேசும்போது ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்கக் கூடிய சூழல் இருப்பதால் தாமதம் இருக்கத்தான் செய்யும்.
எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை. இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
புதுவையில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பானைச் சின்னத்தையும் ஒதுக்கவில்லை. சுயேச்சை சின்னத்திலேயே புதுவையில் போட்டியிடவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் காலை முதலே திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் எவை என்பது குறித்து வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. அந்த வகையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை செய்தியாளர்களிடம் கொடுத்தார்.
அதில் விசிக போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:
காட்டுமன்னார்கோவில் (தனி)
செய்யூர் (தனி)
திருப்போரூர்
அரக்கோணம் (தனி)
திண்டிவனம் (தனி)
பெரியகுளம் (தனி)
கள்ளக்குறிச்சி (தனி)
பண்ருட்டி
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி!












Click it and Unblock the Notifications