சூடாகும் விழுப்புரம்.. நேருக்கு நேர் மோதும் பாமக- விசிக.. திருமாவின் ராஜதந்திரம் இதுதான்!

விழுப்புரத்தில் பாமக கட்சியும், விசிக கட்சியும் நேருக்கு நேர் மோத இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது விசிக

    சென்னை: விழுப்புரத்தில் பாமக கட்சியும், விசிக கட்சியும் நேருக்கு நேர் மோத இருக்கிறது. இதனால் இந்த தொகுதி அதிக கவனம் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடாக்கிக் கொண்டே செல்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தற்போது லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட இருக்கிறார்கள்.

    பாமக தொகுதி

    பாமக தொகுதி

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விழுப்புரம் தொகுதியும் ஒன்றாகும். விழுப்புரம் தொகுதி தனித்தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    விசிக இரண்டு

    விசிக இரண்டு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இரண்டு தொகுதியும் தனித்தொகுதி ஆகும்.

    சூப்பர்

    சூப்பர்

    இதில்தான் விசிக ஒரு அதிரடி திட்டத்தை செய்துள்ளது. அதன்படி சிதம்பரம் தொகுதியில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆனால் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் திமுக சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இங்கு திருமாவளவன் வெற்றிபெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இவரை எதிர்த்து இதே தொகுதியில் அதிமுக போட்டியிட உள்ளது. அதனால் தொல். திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவர் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். இதனால் விழுப்புரத்தில் கடுமையான போட்டி நிலவும். இதன் காரணமாகவே ரவிக்குமார் தனி சின்னம் இல்லாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். பாமகவை எதிர்க்க இவர் திமுக சின்னத்தில் களமிறங்குகிறார்.

    சூப்பர் ராஜதந்திரம்

    சூப்பர் ராஜதந்திரம்

    இதை ராஜதந்திரம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பாமகவின் வெற்றியை பறிக்கும் வகையில், சூரியன் சின்னத்தில் களமிறங்க விசிக முடிவெடுத்துள்ளது. திமுக கேட்காமலேயே, திமுகவின் சின்னத்தில் களமிறங்க விசிக முடிவெடுத்து இருக்கிறது.

    ஒரேதொகுதி

    ஒரேதொகுதி

    விசிக - பாமக நேரடியாக மோதும் ஒரே தொகுதி ஆகும். அதேபோல் இரண்டு முக்கிய எதிர் எதிர் துருவங்களான விசிக பாமக இங்கு மோதுகிறது. முக்கியமான வேட்பாளரான ரவிக்குமார் இங்கு போட்டியிட உள்ளார். இதனால் தற்போது விழுப்புரம் அதிக கவனம் ஈர்த்து உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+