ஒரு துணை மேயர் உட்பட.. 16 பதவிகளை தட்டி தூக்கிய விசிக.. முக்கிய புள்ளிக்கு கல்தா தந்த திமுக?
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் மேயர், துணை மேயர், நகரமன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை ஆளும் திமுக இன்று வெளியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இதில் வெற்றிபெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றனர். நாளை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் நேற்று பதவி ஏற்பு விழா நடந்தது.

வெற்றி
இந்த நிலையில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை செய்து வந்தது. இதில் காங்கிரஸ் தவிர வேறு எந்த கட்சிக்கும் மேயர் பதவி திமுக கூட்டணியில் வழங்கப்படவில்லை. கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று இருந்தது. இதில் மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.72% வாக்குகளை பெற்றது.

நகராட்சி வார்டு
அதேபோல் நகராட்சி வார்டுகளில் 0.62% வாக்குகளை பெற்றது. பேரூராட்சிகளில் 0.61% வாக்குகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது. இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் துணை மேயர் பதவி திமுக மூலம் வழங்கப்பட்டு உள்ளது. 2 நகராட்சி தலைவர் பதவிகள், 3 நகராட்சி துணை தலைவர் பதவி, 3 பேரூராட்சி தலைவர் பதவிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாழ்வுரிமைக்கட்சி
7 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் விசிகவுக்கு திமுக ஒதுக்கி உள்ளது. முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தம்பி கண்ணன் திமுக கூட்டணியில் போட்டியிட்டு கடலூர் மாநகராட்சி வார்டில் வென்றார். இவருக்குதான் இங்கு துணை மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இங்கு துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட சீட் விவரங்கள்
விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட சீட் விவரங்கள்
மாநகராட்சி துணை மேயர்
1. கடலூர் - கடலூர் மாவட்டம்.
நகராட்சி தலைவர்
1. ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம்.
2 நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்.
நகராட்சி துணைத் தலைவர்
1. திண்டிவனம் - விழுப்புரம் மாவட்டம்,
2. பெரியகுளம் - தேனி மாவட்டம்.
3. இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?
பேரூராட்சி தலைவர்
1. பெண்ணாடம் - கடலூர் மாவட்டம்.
2.காடையாம்பட்டி - சேலம் மாவட்டம்.
3. பொ.மல்லாபுரம் - தருமபுரி மாவட்டம்
பேரூராட்சி துணைத் தலைவர்
1. கடத்தூர் - தருமபுரி மாவட்டம்,
2 திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்டம்.
3. புவளகிரி - கடலூர் மாவட்டம்,
4.கொளத்தூர் - சேலம் மாவட்டம்.
5. வேப்பத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்.
6. அனுமந்தன்பட்டி - தேனி மாவட்டம்.
7. ஓவேலி - நீலகிரி மாவட்டம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications