"எல்லா போனையும் உங்களுக்கு டைவர்ட் பண்றேன்.. நீங்களே பதில் சொல்லுங்க".. காயத்ரி ரகுராம் அதிரடி!

திருமாவளனுக்கு ட்வீட் போட்டு வம்பிழுத்துள்ளார் காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "என்னுடைய எல்லா போன் காலையும் உங்களுக்கு டைவர்ட் பண்றேன் திருமாவளவன்... என்னை மிரட்டும் உங்கள் குண்டர்களுக்கு நீங்களே பதில் சொல்லுங்க" என்று காயத்ரி ரகுராம் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். இதற்கு, "நீங்களே அட்டென்ட் பண்ண வேண்டியதுதானே? உங்களுக்கு அந்த கட்ஸ் இல்லையா?" என்று காயத்ரியை சிறுத்தைகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இதனால் விசிக - பாஜகவினரின் ட்விட்டர் போர் அனல் தெறிக்கிறது.

கருப்பர் கூட்டம் விவகாரம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்துக்கு காயத்ரி ரகுராம் வீடியோ வெளியிட்டு காட்டமாக பேசியிருந்தார். அதில், "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுக்குறீங்களா?. நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டி காசு வாங்குறீங்க. அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? நாங்க குற்றச்சாட்டு வைக்கிறோம்.

Viduthalai Siruthai Katchi and bjp Gayathri raghurams twitter war

நாங்க முருகர் பெயரை தான் வைத்துள்ளோம். நீங்க சாமி பெயரை வைத்திருக்கிங்களா? தமிழ்நாடு கலாச்சாரத்தையும், கடவுளையும் பேசுற எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை!" என்று காயத்ரி சொல்லவும் விசிகவினர் கொந்தளித்து விட்டனர்.

இப்படி தொடர்ந்து காயத்ரி விசிகவினரை இழிவுபடுத்தியபடியே வந்ததால், ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர்கள், போலீசில் புகார் தந்துள்ளனர்.. அக்கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "எங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏழை-எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காக போராடி வரும் அவரைப்பற்றி சாதியின் பெயரை அடையாளப்படுத்தியும், மதத்தை அடையாளபடுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார்.

அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், காயத்ரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "என்னுடைய எனது எல்லா போன் அழைப்புகளையும் உங்களுக்கு டைவர்ட் பண்றேன் திருமாவளவன். என்னை மிரட்டும் உங்கள் குண்டர்களுக்கு நீங்களே பதில் சொல்லுங்க" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்புமாக கமெண்ட்கள் வந்தபடியே உள்ளன.. "அக்கா.. அவங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணவும், நாடக காதல் பண்ணவும், மிரட்டி பணம் வாங்கவும்தான் தெரியும்.. உங்களுக்கு பதில் சொல்ல சரக்கு மிடுக்கிற்கு நேரம் இல்லை என நினைக்கிறேன்"என்றும், "நீங்க தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே.. நீங்களே அட்டென்ட் பண்ண வேண்டியதுதானே? உங்களுக்கு அந்த கட்ஸ் இல்லையா?" என்றும் பதிலடிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

Recommended Video

    Vanitha எப்படி 'Tanjore-ல் எல்லாருக்கும் 2 மனைவிகள்' என்று சொல்லலாம்? -குவியும் புகார்கள்

    விசிகவினரும் பாஜகவினரும் மாறி மாறி கமெண்ட்களை போட்டு காயத்ரியின் ட்விட்டரை அனல்பறக்க விட்டு கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+