கொழும்பு சென்ற விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு.. சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கொழும்புக்கு சென்ற வியட்ஜெட் விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.35 மணியளவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் முழு எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் நேற்று இரவு ஏர்போர்ட்டில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

வியட்நாமில் உள்ள ஹோ ஷி மின்ஹ் நகரில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு வியட்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் இயங்கி வருகிறது. ஏர்பஸ் ஏ320 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல புறப்பட்டு கொழும்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

Vietjet Airlines to Colombo diverted to Chennai Makes emergency landing after engine failure

என்ஜினில் பழுது

சுற்றுலா, தொழில் நிமித்தமாக இருநாடுகளுக்கும் இடையே பயணிகள் அதிகம் பயணிப்பதால் எப்போதும் பிசியாக இருக்கக் கூடிய சர்வதேச விமானங்களில் ஒன்றாக இந்த VJC1875 என்ற விமானம் உள்ளது. இந்த விமானம், வியட்நாமில் இருந்து புறப்பட்டு வந்த கொண்டிருந்த போது திடீரென என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டது. விமானத்தின் ஒரு என்ஜினில் பழுது ஏற்பட்டது கண்டறியபப்ட்டதும் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

அவசர அவசரமாக தரையிறக்கம்

இதையடுத்து, விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு அவசர அவசரமாக வியட்ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று இரவு 9.55 மணியளவில் விமான நிலையத்தில் எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

சென்னை ஏர்போர்ட்டில் இரவு 10.27 மணிக்கு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த குழுவினர் உடனடியாக அதை இழுத்துச்சென்று பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு விமானத்தின் கோளாறை சரி செய்யும் பணிகளில் தொழில் நுட்பக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

வியட்ஜெட் விமான நிறுவனம், முழு எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதால், ஏர்போர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விமானம் தரையிறங்கிய பிறகு இரவு 10.35 க்கு சென்னை விமான நிலையத்தில் எமெர்ஜென்சி நிலை வாபஸ் பெறப்பட்டது.

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய வியட்நாம் விமானத்தில் மொத்தம் 143 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விமானத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+