Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயன்தாரா நல்லா ஏமாற்றுவார்.. சொல்வது விக்னேஷ் சிவன்.. கொசு சம்பவம் பிளாஷ்பேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் சிறப்புக் காட்சி நேற்று பத்திரிகையாளர்களுக்காக வெளியிடப்பட்டது. அதில், நயன்தாரா தன்னை அறைவதற்கு பயன்படுத்தும் டெக்னிக் பற்றிக் கூறியுள்ளார் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'நானும் ரௌடி தான்' படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நயன்தாரா 'காதம்பரி' என்ற கேரக்டரில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.

nayanthara vignesh shivan dhanush

"நானும் ரவுடி தான்" திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அது காதலாக மாற, கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் திருமணம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'Nayanthara: Beyond the fairy tale' ஆவணப் படம் நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அதில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை சாதாரணமாக அறைவதற்கு பயன்படுத்தும் டெக்னிக் பற்றி பகிர்ந்துள்ளார்.

உரையாடலின் போது, ​​நயன்தாரா விக்னேஷ் சிவனின் கழுத்தில் அறைந்து குறும்புத்தனமாக சிரிக்கிறார். உடனே, விக்னேஷ் சிவன் "என்னாச்சு?" என்று நயன்தாராவிடம் கேட்க, அவர், ஒரு கொசு இருப்பதாக சொல்கிறார். விக்னேஷ் சிவன் அதுபற்றி கூறுகையில் "இது என்னை அடிக்க அவர் பயன்படுத்தும் ஒரு புதிய டெக்னிக். கொசு எல்லாம் இல்லை. இந்த வீடு முழுவதும் மஸ்கியுட்டோ புரூஃப். ஆனால் நயன் எந்த காரணமும் இல்லாமல் என்னை அடிப்பார், அதற்கு கொசுவின் மீது பழி போடுவார்." எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய விக்னேஷ் சிவன், "நான் இதிலிருந்து ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கினேன். நயன்தாராவின் இந்த டெக்னிக் அடிப்படையில், நான் ஒரு கதையை எழுதியுள்ளேன். இது முழுமையாக என் இதயத்தில் இருந்து வந்தது." விக்னேஷ் சிவன் சொல்வதைக் கேட்டு வெட்கமடைந்த நயன்தாரா, கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார்.. அப்போதும் விக்னேஷ் சிவன் கன்னத்தில் கொசு இருப்பது போல் மீண்டும் அறைந்தார்.

நானும் ரௌடிதான் திரைப்படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆவணப் படத்திற்கு இதுவரை தனுஷ் தரப்பு அனுமதி வழங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து டாகுமெண்ட்ரியின் ட்ரெய்லரில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி வீடியோ பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மூன்று வினாடி காட்சிகளை தமது அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, தனுஷ் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா. காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்கான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது என அதில் குறிப்பிட்டிருந்தார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த 3 வினாடி வீடியோவை ட்ரெய்லரில் பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் அந்த மூன்று வினாடி வீடியோவை தனது ஆவண படத்தில் பயன்படுத்தியுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் கொண்டதாக நாளை வெளியாகும் நிலையில், தனுஷ் தரப்பில் இருந்து காப்பிரைட் நஷ்ட ஈடு கேட்கப்பட்ட அந்த காட்சிகள் இதுவரை நீக்கப்படாமல் இருக்கிறது. அதேசமயம், 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் காட்சிகளும் இசையும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+