“பாஜகவை எதிர்க்க விஜய் பயப்படுகிறார்.. அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி” - சொல்வது திருமாவளவன்
சென்னை: "பாஜகவையோ மோடியையோ எதிர்ப்பதற்கு விஜய் தயாராக இல்லை. விஜய் அச்சப்படுகிறார் என்பது தெரிகிறது. இந்த அச்சம் ஏன் என்று மக்களிடம் விஜய் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது." என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய்யின் விசில் சின்னம் சுயேச்சை சின்னங்களில் அது ஒரு சின்னம். சுயேச்சை சின்னம் பெற்றிருக்கிறார். இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சியில் எல்லாம் மறைமுகமாக பல்வேறு யுத்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அப்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யையும் பாஜகவினர் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தி வருகின்றனர் என்று பலரும் யூகித்து சொல்லக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது. யாரும் அதை மறுக்க முடியாது.

விஜய் பாஜக கொடுக்கும் நெருக்கடிக்கு ஆளாகி அந்தக் கூட்டணியில் இடம்பெற்றால் அவருடைய அரசியல் என்பது கேள்விக்குறியாகி விடும். விஜய் மட்டுமல்லாமல் விஜய்யுடன் இருக்கக்கூடிய நபர்களுக்கும் விசாரணை என்ற பெயரில் பாஜகவினர் அச்சுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது." என்றார்.
'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்குவதில் மத்திய அரசு வேகமாகச் செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்படி பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும். பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனித்து இருக்கிறார்.
அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பா.ஜ.க.வும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடி தருகிறதா என்ற கேள்விக்கு விஜய் அவர்களால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும். ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை. அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. விஜய்யை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது. விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரையும் பா.ஜ.க. அச்சுறுத்துவதாக தகவல் வருகிறது. விஜய்க்கு பா.ஜ.க. நெருக்கடி தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை பா.ஜ.க மிரட்டி வருகிறது.
ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பதற்கு பாஜக அரசியல் தலையீடு இருக்கின்றது என்றால் விஜய் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார். அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றம் மட்டுமே நெருக்கடி தருகிறதா? அல்லது பாஜகவும் சேர்ந்து நெருக்கடி தருகிறதா? என்று விஜய் மட்டும் தான் பதில் சொல்ல முடியும். ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. பாஜகவையோ மோடியையோ எதிர்ப்பதற்கு தயாராக இல்லை. விஜய் அச்சப்படுகிறார் என்பது தெரிகிறது. இந்த அச்சம் ஏன் என்று மக்களிடம் விஜய் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.
விஜய் வெளிப்படையாக அதிகாரத்தில் பங்கு தருவார் என்று அறிவித்த பின்னரும் அவருடைய கட்சியில் சேர்வதற்கு தயங்குகிறார்கள் என்றால் அரசியல் களத்தில் நிலை என்னவாக இருக்கிறது என்றால் விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் விஜய்யிடம் ஒரு மாயை உருவாக்கி வருகிறார்கள். யாருடைய துணையும் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற்றிட முடியும், ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications