உளவுத்துறைக்கு வந்த ரகசிய தகவல்.. உடனே கிளம்பிய காவல்துறை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியலில் மிகப்பெரிய அதிர்வை தவெக உருவாக்கியுள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலை உருவாக்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சம்பவம் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். மேலும் இது 24 மணி நேரத்தில் இது 2வது முறையாகும்.

Vijay Tvk politics vijay meets tamil nadu governor tvk 113 mlas list tamil nadu governor arlekar vijay ib intelligence alert tamil nadu chennai security heightened tvk vijay stakes claim 108 seats tvk falls short of 118 majority vijay supporters protest alert tamil nadu politics latest news tvk government formation delay congress 5 mlas support tvk vijay second governor meeting tamil nadu ib warning police vijay oath postponed tamil nadu assembly 2026 developments 113 108 118 5 2026

இதற்கிடையில் உளவுத்துறைக்கு வந்ததாக ரகசிய தகவல்கள் மூலம் சென்னை மற்றும் மாநிலத்தின் பல முக்கிய இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டு உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளன.

ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது, தவெக சார்பில் வெற்றி பெற்ற 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியல் உள்ளிட்ட மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவை அவர் சமர்ப்பித்தார்.

ஆனால் தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என்பதால், தேவையான எண்ணிக்கையை நிரூபித்த பிறகே ஆட்சியமைக்க அனுமதி வழங்க முடியும் என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உடனடியாக முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு தற்காலிகமாக தள்ளிப்போனது.

இதற்கு மத்தியில் தவெக கட்சியினர் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் தலா 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ளதால் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழகம் முழுவதும் அதிகரித்த பாதுகாப்பு

இந்த அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், மாநிலத்தின் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் பதற்றம் மற்றும் ஆதரவாளர்கள் எழுச்சி காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்களின் இல்லங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் சுற்றுவட்டாரத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

இதற்கிடையே, விஜய்க்கு உடனடியாக ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்காததை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் தகவல் பரவியதாகவும், இது உளவுத்துறையின் கவனத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது.

சில இடங்களில் ஆதரவாளர்கள் தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகிறார்கள் என்ற ரகசிய தகவல்களும் காவல்துறைக்கு கிடைத்ததாக கூறப்படுவதால், பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.

ஒருபுறம் பெரும்பான்மை எண்களை தேடி தவெக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் பழைய அரசியல் எதிரிகளாக இருந்த கட்சிகள் கூட புதிய அரசியல் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+