Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. விஜய்யை மக்களின் கடைசி நம்பிக்கை என்றும், விஜய்க்கே பிறந்த சின்னம் விசில் உள்ளிட்ட வரிகள் கவனம் ஈர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடலின் ஒரு பகுதியை விஜய்யும் பாடி இருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக தரப்பில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேபோல் அதிமுகவும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இருக்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.

தவெக தரப்பில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்று 3 வகையாக தவெக வேட்பாளர்கள் பட்டியல் அமைந்துள்ளது. அதேபோல் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்ட சூழலில், நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 21 வரை விஜய் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் பயணம் மேற்கொள்ளதாக தெரிகிறது.
அதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர். தவெக வலிமையாக இருக்கும் தொகுதிகளில் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அக்கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தவெக சார்பாக தேர்தல் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தவெக கொடி விழா, மதுரை மாநாடு ஆகியவற்றில் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு அது டிரெண்டாகியது.
இந்தப் பாடலின் ஒரு பகுதியை விஜய் நேரடியாகவே பாடி இருக்கிறார். விஜய் மற்றும் விசில் சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் அத்தனையையும் விட்டு விஜய் வந்துள்ளார் என்றும், மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இது தவெகவினரால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்!












Click it and Unblock the Notifications