தவெக எனும் வாட்சப் குழு.. ஓரமா போய் விளையாடுங்க பனையூர் பண்ணையார் Uncle.. விஜய்யை சாடிய அதிமுக
சென்னை: சேலம் மாவட்டத்தில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் ஐடி விங் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்யை பனையூர் பண்ணையார் என்று விமர்சித்துள்ள அதிமுக, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக் கொண்டு தவெக ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை. கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆரை மறந்தது. கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது.

பனையூர் பண்ணையார் விஜய்
அவர்கள் பேசியதையும், பின்பற்ற வேண்டும் என்று கூறிய அனைத்தையும் மறந்துள்ளீர்கள். முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா? என்றும் சவால் விடுத்தார். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக ஐடி விங் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?
அடுத்தவர் குதிரையில் சவாரி
அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க.. வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu.. அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu.. இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?
அதிமுக வரலாற்றை கேள்வி கேட்கலாமா
"திமுக எதில் எல்லாம் Out Of Control" என்பதை எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, "Action" என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்..!! சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?
தவெக எனும் வாட்சப் குழு
கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், "அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்" என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.
அண்ணா, எம்ஜிஆர் மீது சவாரி செய்யாதீங்க
உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்! எங்கள் முழக்கம் இன்றும் "அண்ணா நாமம் வாழ்க!" தான்!
நாகரீகத்துடன் நடந்த எடப்பாடி
நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் "இரத்தத்தின் இரத்தமான" உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் "அம்மாவின் ஆட்சி"யைத் தான்! "அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்" இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற "அம்மா கற்றுத் தந்த" அரசியல் பண்போடு தான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.
ஓரமா போய் விளையாடுங்க விஜய்
அப்புறம் பனையூர் பண்ணையாரே... இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle! என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications