Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் உடன் கூட்டணி.. தனி கட்சி ஆரம்பிக்கும் ப.சி! நடுரோட்டில் நிற்க போகும் காங்., அண்ணமலை அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ்நாட்டு மக்களுக்காக பேசுகிற காங்கிரஸ் யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சி விஜயோடு சென்று விட்டால், ப.சிதம்பரம் அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைப்பார் என பத்திரிகைகள் செய்தி வெளியாகியுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சியினர் 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கும் செல்லாமல் நடுரோட்டில் நிர்ப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை," தமிழகத்தில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை ஓரளவு கை கொடுத்துள்ளது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் இந்தியாவிற்கு கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தான் தடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறிகிறார்.

நான்கரை ஆண்டு காலமாக தமிழகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆண்டு கொண்டுள்ளார். தற்போது வைகோவின் நடைப்பயணம் வரவேற்கின்ற விஷயம் தான் தவறு கிடையாது. மூத்த தலைவர் தமிழக முதல்வர் தற்போது பேசியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.. தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது.

Annamalai p Chidambaram Congress

பாஜக அண்ணாமலை

நம் அனைவருக்கும் தெரியும். இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்ற பழியை மத்திய அரசின் மீது போட பார்க்கிறார்கள். இது திமுகவிற்கு கைவந்த கலை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கைவந்த கலை. வரும் ஆறு மாத காலமாக இதை கையில் எடுப்பார்கள். அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. மத்திய அரசுக்கும் தமிழகத்தில் உள்ள காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் கஞ்சா ஒழிப்பது முதலமைச்சரின் பொறுப்பு. இதற்கு முன்பு வேறு வேறு ஆட்சி காலத்தில் திறமையாக காவல்துறையினர் வேலை செய்தனர்.

சட்டம் ஒழுங்கு

காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை எனக் கூறிவிடலம். இது போன்ற பொய்களை தொடர்ந்து ஆறு மாத காலமாக கூறுவார்கள். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் அறிவார்ந்தவர்கள். மாநில அரசின் வேலை என்ன? மத்திய அரசின் வேலை என்ன? என முழுவதுமாக மக்கள் தெரிந்தவர்கள். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முதலமைச்சராக நான் தோற்று விட்டேன் என அவர் கூறட்டும். இதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம். தோற்று விட்டு பழியை மத்திய அரசு இது போடுவதை எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழக காங்கிரஸ் பிரச்சனை

தமிழக காங்கிரசை பொருத்தவரைக்கும் டெல்லிக்கும் தமிழகத்திற்கு ஜின்ஜாங் போடுவது தான் தற்போது தொழிலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்காக பேசுகிற காங்கிரஸ் யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சி விஜயோடு சென்று விட்டால், ப.சிதம்பரம் அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைப்பார் என பத்திரிகைகள் செய்தி வெளியாகியுள்ளது. நல்லவர்கள் எல்லாம் தமிழ் மாநில காங்கிரஸில் உள்ளனர். காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி. அதற்கு தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவரே சான்று. அவர் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் பாருங்கள்.

காங்கிரஸ் நடுரோட்டில்

காங்கிரஸ் கட்சியினர் 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கும் செல்லாமல் நடுரோட்டில் நிர்ப்பார்கள். அதற்காக எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள். குதிரை பேரம் பேசுகிறார்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்ய அடிக்கடிக்கு வருகிறார்கள். இதற்காகவே அவர்களுக்கு கஜானா காலியாக விடும் போல் உள்ளது. இந்தியாவில் எப்படி காங்கிரஸ் என்கின்ற கட்சி இல்லையோ, அதுபோல தமிழகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பின் அளவில் உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+