எவிடென்ஸை தூக்கி கையில் கொடுத்த விஜய்.. மன ரீதியான கொடுமை.. சங்கீதாவிற்கு எகிறும் ஜீவனாம்சம்!
சென்னை: தமிழக அரசியலில் விவாகரத்து நோட்டீஸ் மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. ஆனால் அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். சுரேஷ் வீட்டுத் திருமண வரவேற்பில், நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் வந்து, 'ட்வின்னிங்' உடையில் விஜய் இறங்கியதுதான் இப்போது சமூக வலைதளங்களின் 'செகண்ட் ஹாஃப்' ட்விஸ்ட்!
இந்த 'ஜோடி' வருகை சில விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி இது விஜய்க்குப் பெரிய 'செக்' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அப்படி என்ன சிக்கல்கள்?

சங்கீதாவின் 'பிரம்மாஸ்திரம்'!
சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், "2021-லேயே ஒரு நடிகையுடனான தொடர்பை விஜய் ஒப்புக்கொண்டார், பிறகு திருத்திக்கொள்வதாகச் சொன்னார். ஆனால், இப்போது பொதுவெளியில் அதே நடிகையுடன் வலம் வருவது எனக்குப் பெரும் அவமானத்தையும், மன உளைச்சலையும் தருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்வின் வீடியோக்கள் இப்போது சங்கீதாவிற்கு மிக முக்கியமான 'சூழல்சார் ஆதாரமாக' (Circumstantial Evidence) மாறியுள்ளது. இந்தியக் குடும்ப நலச் சட்டப்படி, விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது கணவர் வேறொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டுவது, மனைவியின் 'மன ரீதியான கொடுமை' (Mental Cruelty) என்ற வாதத்தை வலுப்படுத்தும்.
எகிறப்போகும் ஜீவனாம்சம் (Alimony)!
பொதுவாக விவாகரத்து வழக்குகளில் கணவரின் சொத்து மதிப்பு மற்றும் வருமானத்தைப் பொறுத்தே ஜீவனாம்சம் நிர்ணயிக்கப்படும். ஆனால், கணவர் மீது 'தவறான உறவு' அல்லது 'மனைவியைப் புறக்கணித்தல்' போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் மனைவியின் தரப்பு நியாயத்தைப் பரிசீலித்து, ஜீவனாம்சத் தொகையைப் பல மடங்கு உயர்த்த உத்தரவிட வாய்ப்பு அதிகம்.
விஜய் இப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக 2026 தேர்தலை எதிர்நோக்கியிருப்பதால், இந்தப் பிரச்சனை சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடியைத் தரும் என்பதால், சங்கீதா கேட்கும் பல நூறு கோடி ரூபாய் ஜீவனாம்சத்திற்கு விஜய் 'சம்மதிக்க' வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.
பி.என்.எஸ் (BNS) சட்டம் என்ன சொல்கிறது?
புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தில் 'அடல்டரி' கிரிமினல் குற்றம் இல்லை என்றாலும், இதோ இந்த இடத்தில்தான் விஜய் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான பாயிண்ட்கள் உள்ளன:
பிரிவு 85 மற்றும் 86: மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கோ அல்லது கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் அளவுக்கோ கணவர் நடந்துகொண்டால் அது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். சங்கீதா தனது மனுவில் 'மன வேதனை' (Emotional Agony) என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால், இது விஜய்க்கு ஆபத்தாக முடியலாம்.
பிரிவு 69: ஒருவேளை திரிஷா தரப்பிலிருந்து "விவாகரத்து ஆகிவிட்டது என்று பொய் சொல்லி பழகினார்" என ஏதேனும் புகார் எழுந்தால் (இது கற்பனைதான் என்றாலும்), அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு.
அரசியல் களத்தில் 'லியோ'வின் லீலைகள்!
விஜய்யின் இந்தத் துணிச்சலான மூவ், "நான் எதற்கும் அஞ்சமாட்டேன்" என்கிற அவரின் அரசியல் பிம்பத்தைக் காட்டுகிறதா அல்லது தனிப்பட்ட வாழ்வில் அவர் எடுத்த தவறான முடிவா? என்பது 2026 சட்டமன்றத் தேர்தலின் போதுதான் தெரியும்.
சட்டம் ஒரு பக்கம் தன் வேலையைச் செய்ய, இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் 'விஜய் - திரிஷா' திருமண வதந்திகள் தீயாய் பரவுகின்றன. எது எப்படியோ, 'விஜய்க்கு இது அரசியல் ரீதியாக மிகப்பெரிய சரிவு.. வீழ்ச்சி.. அடி!
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications