Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு
சென்னை: விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்திற்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் வந்துள்ளனர். மேலும் மேடையில் ஒன்றாகவே போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் ஒரே வண்ணத்தில் இருந்தது.

விஜய் மீது மனைவி புகார்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், 27 ஆண்டுகள் மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு உள்ளது.
விஜய் நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், தன்னை அலட்சியப்படுத்தியதாகவும் விவகாரத்து மனுவில் சங்கீதா கோரியுள்ளார். மேலும் விஜய்யின் சமூக அந்தஸ்து வருமானத்திற்கு ஏற்றவாறு அவரிடம் இருந்து நிரந்தர ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என்றும் தனது மனுவில் சங்கீதா கூறியுள்ளார்.
நடிகையுடன் விஜய் தொடர்பில் உள்ளார்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராகவும், அரசியலில் கால் பதித்துள்ள விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் வீசியுள்ள இந்த புயல், சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறியது அவரது ரசிகர்களிடையேவும் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
சங்கீதா தொடர்ந்துள்ள இந்த மனு ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினமும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் விவரத்தை பின்னர் வெளியிடுவதாகவும் சங்கீதா கூறியிருந்தார்.
விஜய் திரிஷா ஜோடியாக பங்கேற்பு
இந்த நிலையில் தான் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். திருமண விழாவிற்காக விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் தான் வந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து இறங்குகிறார்கள். அவர்களை வரவேற்று அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் மணமக்களுடன் ஜோடியாகவே புகைப்படம் எடுத்துக்கொள்கின்றன.
ஒரே வண்ண உடை
இதில் விஜய்யும் திரிஷாவும் ஒரே வண்ண உடையையே அணிந்து இருந்தனர். விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை முடிவதற்குள், விஜய்யும் திரிஷாவும் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றுள்ளது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
முன்னதாக விஜய் மீது சங்கீதா விவாகரத்து மனு கொடுத்த தகவல் பரவியதும், "யாரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து சொல்லக்கூடாது. டிவி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று விஜய் தரப்பிடம் இருந்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் சென்றதாக தகவல் வெளியாகின.
ஏனென்றால் விஜய்யை ஆதரித்துப் பேசுகிறேன் என உளறிவிட கூடாது என்றும், சங்கீதா ஒரு அனுதாப பிம்பமாக மாறிவிட்டால், அது விஜய்யின் அரசியல் பிம்பத்தை சிதைக்கும் என்பதால் இப்படி கூறப்பட்டதாம். மேலும் சங்கீதாவிடம் சமாதானம் பேசவும் விஜய் தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு












Click it and Unblock the Notifications