முழுசா நனைஞ்ச பிறகு! முக்காடு எதற்கு? ரவி மோகன் Pattern-ல் விஜய்- திரிஷா! நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: இத்தனை நாளாக இலை மறைவு காய் மறைவாக இருந்த விஜய்- திரிஷா சந்திப்புகள் தற்போது வெட்டவெளிச்சமாக மேட்சிங் உடை அணிந்து கொண்டு திருமண விழாவுக்கு வரும் அளவுக்கு போயுள்ளது. இதை பார்க்கும் அவரது மனைவி, பிள்ளைகளின் மனம் என்ன பாடுபடும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த வாரம் இதே வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எனது கணவர் விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. இது எனக்கு 2021 ஆம் ஆண்டுதான் தெரியவந்தது.

இதை அவரிடம் கேட்ட போது இனியும் இப்படி நடக்காது என என்னிடம் வாக்கு கொடுத்தார். ஆனால் சிறிதும் இரக்கமே இல்லாமல் இன்று வரை அந்த உறவை அவர் தொடர்ந்து வருகிறார். என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார்.
பொருளாதாரத்திலும் கடும் நெருக்கடியை தந்தார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தனது சமூகவலைதளங்களில் வெளியிடுவதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானமாக இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவில் ஜீவானாம்சம் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். அந்த நடிகை யாரென சங்கீதா சொல்லாவிட்டாலும் அவர் யார் என்பது ஊருக்கே தெரிந்துவிட்டது. இந்த பிரச்சினை நடந்த போதும் கூட அந்த நடிகை ஒரு பதிவை போட்டு சங்கீதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக வந்தனர். இருவருமே ஒரே மாதிரி நிறத்தில் மேட்சிங் மேட்சிங்காக ஆடை அணிந்திருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக இது போன்ற விழாக்களுக்கு தனியே வரும் விஜய், இந்த முறை இரு நிகழ்வுகளுக்கு திரிஷாவுடன் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இது எதேச்சையான சந்திப்பு கூட இல்லை. இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினர்.
இதுகுறித்து நெட்டிசன்கள் கூறுகையில், இதுவரை இருவரும் ஒன்றாக வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அண்மைக்காலமாக இருவரும் ஒன்றாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
ரவி மோகன் விவகாரத்திலும் இப்படிதான் நடந்தது. ரவி மோகன் விவாகரத்து அறிவித்ததும் கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். இருவரும் பொது இடங்களில் ஒரே மாதிரியான உடைகளை அணிகிறார்கள். ஒன்றாகவே பயணிக்கிறார்கள். ஆனால் ரவி மோகனோ தங்களுக்குள் எந்த தவறான பழக்கமும் இல்லை என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்து ஆர்த்தி மன வேதனை அடைகிறார். அது போல் விஜய் - திரிஷாவை பார்த்து சங்கீதாவும் வேதனையில் உள்ளார் என்கிறார்கள்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications