2006ல் விஜயகாந்த் பயணித்த ரூட்.. தவெக தலைவர் விஜய் எடுத்த முடிவு.. திமுகவுக்கு மீண்டும் தொல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தவெக தலைமையில் கூட்டணி என்று விஜய் அறிவித்துள்ளதன் மூலமாக, 2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் பயணித்த பாதையில் பயணிப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக விஜய் மிகப்பெரிய அரசியல் ரிஸ்கை எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தவெகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.

Kanimozhi Vijay tvk dmk politics

தவெக தனித்து போட்டி?

ஆனால் கூட்டணி அழைப்புகளை மொத்தமாக நிராகரித்து தவெக முடிவை வெளிப்படையாக அறிவித்துள்ளார் விஜய். அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை அறிவித்துள்ளதால், நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.

தேமுதிகவை பின்பற்றும் விஜய்

விஜயின் இந்த செயல்பாடுகள் 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த் செயல்பாடுகளோடு ஒத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அவரும் ரசிகர் மன்றங்களை சரியாக கட்டமைத்து அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிட்டவர் தான். முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக தனித்து களம் கண்டவர்.

2006ல் தேமுதிக

கட்சியின் பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் ஆகிய 3 வார்த்தைகளும் இடம்பெற்றது. தேர்தலுக்கு சரியாக ஓராண்டுக்கு பின் செப்டம்பரில் மதுரையில் கட்சியை தொடங்கினார் விஜயகாந்த். அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட விஜயகாந்த், மொத்தமாக 8.32 சதவிகித வாக்குகளை கைப்பற்றினார். ஆனாலும் விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார்.

விஜய் பின்பற்றுகிறாரா?

முதல் தேர்தலிலேயே சுமார் 10 சதவிகிதத்திற்கு நெருக்கமாக வாக்கு வங்கியை காட்டிய விஜயகாந்த், 2009 மற்றும் 2011 தேர்தலில் உச்சத்திற்கு சென்றார். 2011ல் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு முன்னேறினார். ஆனால் அதன்பின் விஜயகாந்த் பாதை இறங்குமுகமாகவே இருந்தது. தற்போது விஜய் விஜயகாந்த் பாதையை பின்பற்றுவதாக பார்க்காப்படுகிறது.

விஜய் மட்டும் தெரிந்த முகம்

விஜயும் கிட்டத்தட்ட செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் மக்களை சந்திக்க இருக்கிறார். தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன் சூறாவளி பயணம் மேற்கொள்ளும் விஜய், தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக சார்பாக விஜயை தவிர்த்து வேறு எந்த வேட்பாளரும் உள்ளூரில் பலம் வாய்ந்தவராக தெரியவில்லை.

அரசியல் ரிஸ்க்

இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் குறிப்பிட்ட அளவுக்கான வாக்கு சதவிகிதத்தை பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் முதல் தேர்தலிலேயே கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கி தனது பலத்தை நிரூபிக்க விஜய் முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக விஜய் மிகப்பெரிய ரிஸ்கை எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

திமுகவுக்கு தொல்லை

அதேபோல் 2006ல் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு விஜயகாந்த் அரசியல் வருகையும் ஒரு காரணம். அப்போது விஜயகாந்த் அரசியல் திமுக எதிர்ப்பை மையப்படுத்தியே இருந்தது. தற்போது விஜய் அரசியல் நகர்வுகளும் திமுக எதிர்ப்பையே பிரதானப்படுத்தி இருப்பதால், மீண்டும் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதோ என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+